Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக அரசு கல்லூரிகளில் 426 பேராசிரியர் பணியிடங்கள்.. சூப்பர் சான்ஸ்! விட்றாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு மற்றும் கலை கல்லூரிகளில் 426 கவுரவ பேராசிரியர்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்காலிக அடிப்படையில் இந்த விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மாவட்ட வாரியாக, பாடவாரிய காலியிடங்கள் அறிவிக்பட்டுள்ளன.

இந்த பணியிடங்களுக்கு முதுகலை பட்டத்துடன் பேராசிரியர் பணிக்கான கல்வி தகுதியை பெற்று இருப்பவர்கள் விண்னப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேர்வு முறை என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

426 Professor Posts Open in Tamil Nadu Government Colleges Don t Miss This Golden Opportunity

பணியிடங்கள் விவரம்:

கவுரவ பேராசிரியர்கள் 426

பிசிஏ - 03,
பயோ டெக்னாலஜி - 02
வணிக நிர்வாகம் - 03
வேதியியல் - 13
வணிகவியல் (கணக்கு மற்றும் நிதி) - 01
வணிகவியல் (வணிக நிர்வாகம்) - 04
வணிகவியல் (கணினிப் பயன்பாடு) - 17

வணிகவியல் (நிறுவனச் செயலர்) - 04
வணிகவியல் (பொது) - 10
கணினி அறிவியல் - 20
ஆடை வடிவமைப்பு மற்றும் ஃபேஷன் - 08
பொருளாதாரம் - 7
மின்னணுவியல் மற்றும் தொடர்பு - 01
ஆங்கிலம் - 158
சுற்றுச்சூழல் அறிவியல் - 01
உணவு மற்றும் ஊட்டச்சத்து - 02

இயற்பியல் - 07
அரசியல் அறிவியல் - 05
உளவியல் - 07
பொது நிர்வாகம் - 01
சமூகப் பணி - 02
புள்ளியியல் - 26
என 29 வகையான பணியிடங்களில் மொத்தம் 426 காலியிடங்கள் நிரப்பபடுகின்றன.

கல்வித் தகுதி:

முதுகலை பட்டத்துடன் பிஹெச்டி/ செட்/ ஸ்லெட்/நெட்/நெச்/ ஜேஅர்ப் / முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். விண்ணப்பதாரர்கள் ஒரு மண்டலத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஒரு விண்ணப்பதாரரிடம் ஒன்றிற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வரப்பெற்றால் முதலில் உள்ள விண்ணப்பம் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

வயது வரம்பு:

01.07.2025 தேதிப்படி 57 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளத்தை பொருத்தவரை மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும்.

எஸ்சி / எஸ்டி பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://tngasa.org/ - என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப பதிவு 04.02.2026 தொடங்கியது. விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள்; 09.02.2026

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://tngasa.org/

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+