Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!
முகப்பு | திருக்குறள் | இடனறிதல் | கடலோடா கால்வல் நெடுந்தேர் திருக்குறள்

கடலோடா கால்வல் நெடுந்தேர் திருக்குறள்

குறள் பால்
குறள் இயல்
அதிகாரம்
குறள் விளக்கம்
496 கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து

வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது.
— மு. வரதராசன்

ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் `தேர் கடலிலே ஓடாது’ `கப்பல் நிலத்தில் போகாது’ என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும்
— கலைஞர்

வலிய சக்கரங்களை உடைய நெடிய தேர்கள் கடலில் ஒடமாட்டா; கடலில் ஓடும் கப்பல்கள் நிலத்தில் ஓடமாட்டா.
— சாலமன் பாப்பையா

நிலத்திலே ஓடுவதற்குரிய வலிய சக்கரங்களைக் கொண்ட தேர்கள் கடலில் ஓடா; கடலில் ஓடும் கப்பல்களும் நிலத்தில் ஓடமாட்டா
— புலியூர்க் கேசிகன்

நிலத்தில் ஓடும் தேர் கடலிலும் கடலில் ஓடும் நாவாய் நிலத்திலும் ஓடாது. இடம் பொறுத்தே செயல்பாடுகள் இருக்கும்.
— சிவயோகி சிவகுமார்

கால் வலிய நெடுந்தேர் கடலின்கண் ஓடாது: கடலின் கண் ஓடும் நாவாயும் நிலத்தின்கண் ஓடாது. இஃது இடத்திற்காங் கருவி பண்ணவேண்டுமென்றது.
— மணக்குடவர்

கால் வல் நெடுந்தேர் கடல் ஓடா - நிலத்தின்கண் ஓடும் கால்வலிய நெடிய தேர்கள் கடலின்கண் ஓடமாட்டா, கடல் ஓடும் நாவாயும் நிலத்து ஓடா - இனி அக்கடலின்கண் ஓடும் நாவாய்கள் தாமும் நிலத்தின் கண் ஓடமாட்டா. ('கடல் ஓடா' என்ற மறுதலை அடையான் 'நிலத்து ஓடும்' என்பது வருவிக்கப்பட்டது. 'கால்வல் நெடுந்தேர்' என்பது ஓடுதற்கு ஏற்ற காலும் பெருமையும் உடையவாயினும் என்பதுபட நின்றது. 'மேற்சென்றார் பகைவர் இடங்களை அறிந்து அவற்றிற்கு ஏற்ற கருவிகளான் வினை செய்க' என்பது தோன்ற நின்றமையின், இதுவும் மேலை அலங்காரம் ஆயிற்று.).
— பரிமேலழகர்

English Couplet:

The lofty car, with mighty wheel, sails not o'er watery main,
The boat that skims the sea, runs not on earth's hard plain.

Couplet Explanation:

Wide chariots, with mighty wheels, will not run on the ocean; neither will ships that the traverse ocean, move on the earth.

Transliteration (Tamil to English):

kadaloataa kaalval nedundhaer kadaloadum
naavaayum Odaa nilaththu

மொத்தம் 133 அதிகாரங்கள்
496 of 1330

மேலும் இடனறிதல் குறள்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+