Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உமர் அப்துல்லாவின் வீடு அருகே துப்பாக்கிச் சூடு - காஷ்மீரில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லாவின் வீடு அருகே இன்று காலை எல்லைப் பாதுகாப்பு வீரர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் பலமுறை சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவின் வீடு தலைநகர் ஸ்ரீநகரில் குப்கர் சாலையில் உள்ளது. பலத்த பாதுகாப்பு மிகுந்த இந்த ஏரியாவில் இன்று காலை எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் தீடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

பாதுகாப்புப் படை வீரர் தொடர்ந்து பல முறை சுட்டதாகவும், ஆனால் அதில் யாருக்கும் காயமேற்படவில்லை என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

'Accidental firing' by BSF jawan outside Jammu and Kashmir CM Omar Abdullah's residence

காஷ்மீர் தேர்தலை ஒட்டி அம்மாநில முதல்வர் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். எனவே, சம்பவம் நடைபெற்ற போது உமர் அப்துல்லா வீட்டில் இல்லை.

இந்த துப்பாக்கிச் சூடிற்கான காரணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட வீரரிடம் விசாரணை நடந்து வருவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் வீட்டிற்கு அருகில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+