For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பஸ் கட்டண உயர்வுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட வாகனங்கள்.. சமூக வலைதளங்களை தெறிக்கவிடும் வீடியோஸ்!

Google Oneindia Tamil News

Recommended Video

    பேருந்து கட்டண உயர்வை சமூக வலைதளங்களில் வச்சு செய்யும் நெட்டிசன்கள்- வீடியோ

    சென்னை: பஸ் கட்டண உயர்வை கண்டித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

    தமிழக அரசு பேருந்து டிக்கெட் கட்டணத்தை அண்மையில் பாதிக்கும் மேலாக உயர்த்தியத. இதனைத் தொடர்ந்து வசதியானவர்கள் தான் பஸில் பயணிப்பார்கள் என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் கலாய் கருத்துகள் பகீரப்பட்டு வருகின்றன.

    மேலும் பேருந்து கட்டணமாக செலுத்தியே மொத்த பணமும் செலவாகிவிட்டதாகவும் கருத்துகள் எழுந்து வருகின்றன. இப்படி கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பேசாமல் ஸ்ட்ரைக்கே தொடர்ந்திருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    பரவும் வீடியோக்கள்

    பரவும் வீடியோக்கள்

    இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட குடும்ப வாகனங்கள் என சமூக வலைதளங்களில் ஏராளமான வீடியோக்கள் பகீரப்பட்டு வருகின்றன.

    நீண்ட சீட் உள்ள டூவீலர்

    நீண்ட சீட் உள்ள டூவீலர்

    பஸ் கட்டண உயர்வால் குடும்ப வாகனம் அறிமுகம் என்ற பரவி வரும் இந்த வீடியோவில் 10 பேருக்கும் மேலாக அமர்ந்து செல்லும் வகையில் இருசக்கர வாகனம் போன்ற டிசைனில் நீண்ட சீட் அமைக்கப்பட்ட ஒரு வாகனம் வளைத்து வளைத்து காட்டப்படுகிறது.

    நீண்ட மரக்கட்டை இருக்கையாக

    பஸ் கட்டணம் உயர்வுக்கு இந்த குடும்ப டூவீலர் தான் சரியான தீர்வு என வலைய வரும் இந்த வீடியோவில் இருசக்கர ஊர்தியின் இருபுறம் நீண்டஇருக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது இருசக்கர ஊர்தியின் பின்புறம் நீண்ட மரக்கட்டை இருக்கையாக அமைக்கப்பட்டுள்ளது. அதில் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் பலர் அமர்ந்து செல்கின்றனர்.

    தீயாக பரவும் வீடியோ

    தீயாக பரவும் வீடியோ

    இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. இதனை பலரும் தங்களின் பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

    English summary
    Funny videos roaming on internet about Bus ticket price. The Videos are spreading on social media fastly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X