பெண்களை அசிங்கப்படுத்திவிட்டது லட்சுமி குறும்படம்.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
லட்சுமி... சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறாள்?- வீடியோ

சென்னை: லட்சுமி குறும்படத்திற்கு எதிராக நெட்டிசன்கள் கொந்தளிப்பு இன்னும் அடங்கவில்லை. வறுத்து எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

மற்றொருபக்கம் ஆதரவு குரல்களும் லேசாக ஒலித்தபடி உள்ளது. சில பெண் நெட்டிசன்களும் இந்த படத்திற்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளனர். இந்த நிலையில்தான், சில நச் டிவிட்டுகள் கண்ணில் பட்டன. அதிலும் பாரதி பாடலை பாடல் பின்னணியில் ஒலிக்கும் இடத்தில் தப்பு நடப்பதை போல காட்டியது சிலருக்கு இன்னும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்படிப்பட்ட ஒரு டிவிட்டுகளின் தொகுப்பை பாருங்கள்.

தப்புக்கு பெயரா பெண்ணியம்

ஆண்கள் பண்ணுற தப்ப வரிசைகட்டி பெண்களும் பண்ணுறதுக்கு பேரு பெண்ணியம் இல்ல.. இதுவே அந்த ஆண் கிட்ட இதற்கு தீர்வு கிடைக்க உதவி கேட்டுருந்தா சிறப்பா இருந்திருக்கும்.. ஆண்களே இப்படித்தான்ற மாதிரி இருக்கு இந்த #லட்சுமி

தொடர்ந்து செய்ய தயாராகிறாராம்

லக்ஷ்மி செஞ்சது தப்பு னு சொல்ல வரல.. ( குறங்கு மனம் மாறதா செய்யும்)... அவ செஞ்ச தப்பு , தப்புனு தெரிஞ்சும் அத அவ கண்டினீவ் பன்றது தா தப்பு னு சொல்றேன் ... #லட்சுமி

பாரதியார் பாட்டா கிடைச்சது

பாரதியார் கவிதைகள் படும்பாடு..

இதாண்டா பாரதி காதை மறைச்சினே இருந்திருக்கார்... #லட்சுமி . இவ்வாறு சொல்கிறது இந்த டிவிட்.

தூற்ற வைத்துவிட்டனர்

பெண்ணை போற்றுகிறோம் னு சொல்லி , தூற்ற வச்சிடாங்க

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizen troll Lakshmi short film as it showing women in bad light.
Please Wait while comments are loading...