“2021 முடிய போகுது.. ஏதாவது தப்பு பண்ணியிருந்தா”.. இன்னுமா இதெல்லாம் நமத்துப் போகாம இருக்கு?
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டங்கள் பற்றிய ஜாலி மீம்ஸ்கள் இப்போதே இணையத்தில் வைரலாகத் தொடங்கிவிட்டன.
கொரோனா, ஒமைக்ரான், டெல்மைக்ரான் என ஏகப்பட்ட பிரச்சினைகள் சூழ்ந்து நின்றாலும், புத்தாண்டு வந்தால் கொண்டாடத் தயாராகி விடுவார்கள் நமது மக்கள். இம்முறை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதனால் என்ன சமூகவலைதளங்களில் சிறப்பாகக் கொண்டாடிக் கொள்கிறோம் என முடிவு செய்து விட்டனர் நெட்டிசன்கள்.

இன்னும் புத்தாண்டு பிறப்பதற்கு சில தினங்கள் உள்ள போதும், இப்போதே புத்தாண்டு கொண்டாட்ட மீம்ஸ்கள் இணையத்தில் குவியத் தொடங்கி விட்டன. இந்த வருடம் எடுத்த வாக்குறுதிகள், புத்தாண்டிற்கு புதிதாக திட்டமிட்டுள்ள ரிசொல்யூசன்கள், வாழ்த்துகள், கலாய்ப்புகள் என விதவிதமாய் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






