Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!
முகப்பு | திருக்குறள் | கொடுங்கோன்மை | முறைகோடி மன்னவன் செய்யின் திருக்குறள்

முறைகோடி மன்னவன் செய்யின் திருக்குறள்

குறள் பால்
குறள் இயல்
அதிகாரம்
குறள் விளக்கம்
559 முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்

அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.
— மு. வரதராசன்

முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத்தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெறவும் இயலாது
— கலைஞர்

ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.
— சாலமன் பாப்பையா

ஆட்சிமுறை கோணி மன்னவன் ஆட்சி செய்தால், பருவ மழையானது தவறிப் போக, மேகமும் வேண்டுங்காலத்து மழை பொழியாது ஒதுங்கிப் போகும்
— புலியூர்க் கேசிகன்

ஆணைகள் கோடி ஆட்சியாளர் செய்வது, வானம் பெய்தும் கோடி நீர்தங்கும் இடத்தில் நீர் தங்காமல் போவதைப் போன்றதே. நீர் நிலைகள் மழையை தக்கவைத்துக் கொள்ளாததைப் போலவே ஆணைகள் அதிகம் செய்யும் அரசால் நன்மைகள் இருக்காது.
— சிவயோகி சிவகுமார்

முறைமைகோட மன்னவன் செய்வனாயின், மழை துளி விடுதலைத் தவிர்ந்து பெய்யாதொழியும்.
— மணக்குடவர்

மன்னவன் முறை கோடிச் செய்யின் - மன்னவன் தான் செய்யும் பொருளை முறை தப்பச் செய்யுமாயின், உறைகோடி வானம் பெயல் ஒல்லாது - அவன் நாட்டுப் பருவமழை இன்றாம் வகை மேகம் பொழிதலைச் செய்யாது. (இரண்டிடத்தும் 'கோட' என்பன திரிந்து நின்றன. உறைகோடுதலாவது பெய்யும் காலத்துப் பெய்யாமை. அதற்குஏது, வருகின்ற பாட்டான் கூறுப.).
— பரிமேலழகர்

English Couplet:

Where king from right deflecting, makes unrighteous gain,
The seasons change, the clouds pour down no rain.

Couplet Explanation:

If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers.

Transliteration (Tamil to English):

muRaikoati mannavan seyyin uRaikoati
ollaadhu vaanam peyal

மொத்தம் 133 அதிகாரங்கள்
559 of 1330

மேலும் கொடுங்கோன்மை குறள்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+