Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!
முகப்பு | திருக்குறள் | சிற்றினம் சேராமை | நல்லினத்தி னூங்குந் துணையில்லை திருக்குறள்

நல்லினத்தி னூங்குந் துணையில்லை திருக்குறள்

குறள் பால்
குறள் இயல்
அதிகாரம்
குறள் விளக்கம்
460 நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉ மில்

நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.
— மு. வரதராசன்

நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை
— கலைஞர்

ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.
— சாலமன் பாப்பையா

நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாவது உலகத்தில் யாதுமில்லை; தீய இனத்தை விட அல்லல் படுத்துவதும் உலகத்தில் யாதுமில்லை
— புலியூர்க் கேசிகன்

நல்ல இனத்தை விட துணையாவது வேறு இல்லை, தீய இனத்தை விட துன்பம் தருவதும் இல்லை.
— சிவயோகி சிவகுமார்

நல்லினத்தின் மிக்க துணையாயிருப்பதூஉம் இல்லை, தீயினத்தின் மிக்க அல்லற்படுப்பதூஉம் இல்லை. இது சேராமைக்குக் காரணங் கூறிற்று.
— மணக்குடவர்

நல்லினத்தின் ஊங்கு துணையும் இல்லை - ஒருவற்கு நல்லினத்தின் மிக்க துணையும் இல்லை, தீயினத்தின் (ஊங்கு) அல்லல் படுப்பதூஉம் இல் - தீய இனத்தின் மிக்க பகையும் இல்லை. (ஐந்தன் உருபுகள் உறழ்பொருளின்கண் வந்தன. 'ஊங்கு' என்பது பின்னும் கூட்டி உம்மை மாற்றி உரைக்கப்பட்டது. நல்லினம் அறியாமையின் நீக்கித் துயர்உறாமல் காத்தலின் அதனைத் 'துணை' என்றும், தீயினம் அறிவின் நீக்கித் துயர் உறுவித்தலின் அதனைப் 'பகை' என்றும் கூறினார். 'அல்லல் படுப்பது' என்பது ஏதுப்பெயர். இதனான் விதி எதிர்மறைகள் உடன் கூறப்பட்டன.).
— பரிமேலழகர்

English Couplet:

Than good companionship no surer help we know;
Than bad companionship nought causes direr woe.

Couplet Explanation:

There is no greater help than the company of the good; there is no greater source of sorrow than the company of the wicked.

Transliteration (Tamil to English):

nallinaththi noongunh thuNaiyillai theeyinaththin
allaR patuppadhooum il

மொத்தம் 133 அதிகாரங்கள்
460 of 1330

மேலும் சிற்றினம் சேராமை குறள்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+