தமிழகத்தில் இன்று
சென்னை:
"ஸ்பைரல் காண்டம் எனப்படும் ஆணுறை பற்றிய விளம்பரம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
சென்னை தாம்பரத்தை சேர்ந்த லட்சுமியம்மாள் என்ற பெண்மணி, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் அவர்,ஸ்பைரல் காண்டம் என்ற ஆணுறை விளம்பரம் தனியார் தொலைக்காட்சிகளில் மிகவும் ஆபாசமாக ஒளிபரப்பப்படுகிறது.
செய்திகள், டிவி தொடர்கள் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு இடையில் இந்த ஆபாச விளம்பரம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனால் குடும்பத்துடன் உட்கார்ந்துதொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க முடிவதில்லை. என்னைப் போன்ற வயதான பெண்களுக்கு இந்த விளம்பரம் மிகவும் அறுவெறுப்பாக உள்ளது.
இத்தகைய ஆணுறைகளை வயது வந்தவர்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். எனவே அவர்களுக்கு புரியும் வகையில் மட்டும் காட்டலாம்.உதாரணமாக பல குழந்தைகளை பெற்று கஷ்டப்படுவதை போல் நாசூக்காக ஆணுறையின் அவசியத்தை காட்சிகள் மூலம் காட்டலாம்.
ஆனால், தேவையற்ற கவர்ச்சியை விளம்பரத்தில் புகுத்தி ஆபாசமாக்கி விட்டனர். எனவே அனைத்து தொலைக்காட்சிகளும் இந்த விளம்பரத்தைஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
அந்த கடிதத்தை மனுவாக ஏற்று விசாரித்த நீதிபதிகள் என்.வி.பாலசுப்ரமணியம், டி.முருகேசன் ஆகியோர் அடங்கி டிவிஷன் பெஞ்ச், ஆணுறை விளம்பரத்தைஅனைத்து தொலைக்காட்சிகளும் ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்தது