தமிழகத்தில் இன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அரசின் 1998 ம் ஆண்டிற்கான சிறந்த நடிகர் விருதை சரத்குமாரும், சிறந்த நடிகை விருதை ரோஜாவும் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படங்கள், கலைஞர்களுக்குத் தமிழக அரசு சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன. 1998 ம் ஆண்டுக்கான கலைத்துறைவித்தகர்கள் விருது ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது.

1998-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகளுக்கு 34 திரைப்படங்கள் விண்ணப்பித்திருந்தன. இவற்றில் 31 திரைப்படங்கள் விருதுகளுக்குரிய தகுதியுடன்இருந்தன. நீதிபதி பாஸ்கரன் தலைமையிலான தேர்வுக் குழு இப்படங்களைப் பார்வையிட்டு 16-ம் தேதி தேர்வு பெற்ற படங்களின் பட்டியலை அரசிடம்அளித்தது.

Rojaஅதன்படி விருது பெற்ற திரைப்படங்கள் மற்றும் நடிகர், நடிகைகள் குறித்த விபரம்:

சிறந்த படம்: முதல் பரிசு - நட்புக்காக, இரண்டாம் பரிசு-மறுமலர்ச்சி, மூன்றாம் பரிசு -உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன், சிறப்புப்பரிசு-ஹவுஸ்புல், பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படம்-கிழக்கும் மேற்கும்.

நடிகர்: சரத்குமார் (நட்புக்காக, சிம்மராசி)

நடிகை: ரோஜா (உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்)

நடிகர்: (சிறப்புப் பரிசு) கார்த்திக் (உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பூவேலி)

நடிகை: (சிறப்புப் பரிசு) ரேவதி (தலைமுறை)

Revathiநகைச்சுவை நடிகர்: செந்தில் (ஜீன்ஸ், நட்புக்காக)

வில்லன் நடிகர்: ரஞ்சித்

இயக்குநர்: பார்த்திபன் (ஹவுஸ் புல்)

கதாசிரியர்: விக்ரமன் (உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்)

வசனகர்த்தா: பாரதி (மறுமலர்ச்சி)

இசையமைப்பாளர்: பாபி (சொல்லாமலே)

பாடல் ஆசிரியர்: அறிவுமதி (சொல்லாமலே, கிழக்கும் மேற்கும்)

பின்னணி பாடகர்: மலேசியா வாசுதேவன் ( என் ஆசை ராசாவே)

பின்னணி பாடகி: நித்யஸ்ரீ (ஜீன்ஸ்)

Parthibanஒளிப்பதிவாளர்: எம்.எஸ்.அண்ணாதுரை (உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்)

ஒலிப்பதிவாளர்: ஏ.ஆர்.சாமிநாதன் (காதல் மன்னன்)

எடிட்டர்: எம்.என்.ராஜா (ஹவுஸ்புல்)

ஆர்ட் டைரக்டர்: மோகன் - ராஜேந்திரன் (சிம்மராசி)

சண்டைப் பயிற்சி இயக்குநர்: ஜாகுவார் தங்கம் (ப்ரியமுடன்)

நடன ஆசிரியர்: ராஜூ சுந்தரம் (ஜீன்ஸ்)

குழந்தை நட்சத்திரம்: மாஸ்டர் மகேந்திரன் (கும்பகோணம் கோபாலு).

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற