For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அலஹாபாத் நகரின் பெயரை மாற்ற முஸ்லீம்கள் எதிர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

அலஹாபாத் நகரின் பெயரை மாற்றுவது, வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த நகரான அலஹாபாத் நகரின் பெருமையை அழிப்பதற்குச் சமமானது என்று முஸ்லீம்கள்பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது புகழ்பெற்ற அலகாபாத் நகரம். இந்த நகரின் பெயரை மாற்றப் போவதாக உத்தரப்பிரதேச மாநில முதல்வர்ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அலஹாபாத் நகருக்கு த்ரித் ராஜ் பிரயாக் என்று மாற்றப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு அலஹாபாத்தில் வாழும் முஸ்லீம் மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அகில இந்திய முஸ்லீம் சம்மேளன தலைவர் நிஹாலுதின், ஜனாதிபதிகே.ஆர்.நாராயணனிடம் அலஹாபாத் நகர் பெயர் மாற்றப்படுவதை தடுத்த நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிஹாலுதின் கூறியதாவது:

ஊருக்குள் ஒளிந்திருந்த காதல் கதை:

மெளகலாயப் பேரரசர் அக்பர் காலத்தில் இந்த நகருக்கு அலஹாபாத் என்று பெயரிடப்பட்டது. அப்போது அக்பரின் மகன் ஜஹாங்கிர் தனது தந்தையின்எதிர்ப்பையும் மீறி நூர்ஜஹானைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருந்தார். அதற்கு அக்பர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கோபமடைந்தஜஹாங்கிர் அலஹாபாத் நகரில் தங்கியிருந்தார்.

இதையடுத்து அலஹாபாத் நகர் மிகவும் புகழ் வாய்ந்த நகரமாகப் பேசப்பட்டது. அதற்குப் பிறகு இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் குடும்பத்தார் தங்கும்சிறந்த நகரமாக அலஹாபாத் விளங்கியது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த அலஹாபாத் நகருக்குப் பெயர் மாற்றம் செய்யக் கூடாது. அப்படிப் பெயர் மாற்றம் செய்ய முயற்சித்தால் நாங்கள் போராட்டம்நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அகில இந்திய முஸ்லீம் சட்டத்துறை துணைத் தலைவர் கால்பி சாதிக் கூறுகையில், வரும் தேர்தலில் இந்துக்களின் ஓட்டுக்களைத் தக்க வைத்துக் கொள்ளும்விதத்தில்தான் பெயர் மாற்றம் செய்ய பா.ஜ.க முதல்வர் ராஜ் நாத் சிங் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக, அலஹாபாத்திலுள்ள இந்து தலைவர்கள் மற்றும் உயர் ஜாதி மக்களின் ஆதரவைப் பெறும் முயற்சியிலும் இறங்கியுள்ளார் முதல்வர் என்றுகுற்றம் சாட்டியுள்ளார்.

அலஹாபாத் நகரின் பெயரை மாற்ற பா.ஜ.க.முதல்வர் முயல்வது இது முதல்முறையல்ல. ஏற்கனவே 1991 ம் ஆண்டு கல்யாண் சிங் ஆட்சியில் முகுலாசாரிஎன்ற பெயர் மாற்றம் செய்யத் திட்டமிடப்பட்டது. அப்போது மத்தியில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் அரசு, பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லைஎன்று கூறியுள்ளார்.

அலஹாபாத் நகரில்தான் இந்துக்களின் மஹா கும்ப மேளா விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் இங்குகொண்டாடப்பட்ட கும்ப மேளாவில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கோடிக்கணக்கான மக்கள் புனிதநீராடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்திலும் இதே போல் அஹமதாபாத் நகரைப் பெயர் மாற்றம் செய்ய அங்கு ஆட்சி நடத்தி வரும் பா.ஜ.க. முதல்வர்கள் முயன்று வந்தார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X