புலிகள் தாக்குதலில் 5 கடற்படை வீரர்கள் காயம்
கொழும்பு:
இலங்கை வடக்கு யாழ்ப்பாணத்தில் கடற்புலிகள், கடற்படை வீரர்கள் மீது திங்கள்கிழமை கடும் தாக்குதல்நடத்தினர்.
இதில் கடற்படை வீரர்கள் 5 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து இரு தரப்பினருக்கும் கடும் சண்டை நடந்துவருகிறது.
இலங்கையில் புத்தாண்டு மற்றும் புனிதவெள்ளியை முன்னிட்டு ராணுவ வீரர்கள் 3 நாட்கள் சண்டை நிறுத்தம்அறிவித்திருந்தனர்.
சண்டை நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் முடிவடைந்தது. இதையடுத்து திங்கள்கிழமை மீண்டும் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.
முன்னதாக, டிசம்பர் 24 ம் தேதி புலிகள் அறிவித்த சண்டை நிறுத்தம் ஏப்ரல் 24 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆயுதங்கள் வாங்கிக் குவிக்கிறது இலங்கை:
இதற்கிடையே, புலிகளை ராணுவ ரீதியில் ஒடுக்குவதற்காக செக்கோஸ்லவேயா நாட்டிலிருந்து ஏராளமானஆயுதங்களை வாங்கிக் குவிக்கிறது இலங்கை.
நவீன ஆர்.எம்.70 ரக பல குழாய் ராக்கெட்டு லாஞ்சர்கள், 8 டி 55 ரக டாங்குகள், 6 வாகனங்கள் ஆகியவற்றைஇலங்கை வாங்கியுள்ளது.
இலங்கை அதிக அளவு ஆயுதங்கள் வாங்கும் நாடுகளில் செக்கோஸ்லவேகியாவும் ஒன்று என்பதுகுறிப்பிடத்தக்கது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!