For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆயுதப்பேர ஊழல்: வெங்கடசாமி கமிஷன் விசாரணை ஆரம்பம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

ஆயுதப்பேர ஊழல் வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி வெங்கடசாமி கமிஷன் தனது முதற்கட்டவிசாரணையை புதன்கிழமை தொடங்குகிறது.

விசாரணையின் முதற்கட்டமாக ஆயுதப்பேர ஊழல் வழக்கில் முக்கியமான சாட்சியங்கள் குறித்து விசாரணைநடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நீண்ட விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிகிறது.

டெஹல்கா டாட் காம் அம்பலப்படுத்திய ஆயுதப்பேர ஊழல் குறித்து, அகில இந்திய முன்னாள் பாஜக தலைவர்பங்காரு லட்சுமண், சமதா கட்சி முன்னாள் தலைவர் ஜெயா ஜெட்லி, ராணுவ அதிகாரிகள் உள்பட பல அரசியல்தலைவர்களுக்கு நீதிபதி வெங்கடசாமி கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆயுதப்பேர ஊழல் குறித்து தங்களுக்குள்ள தொடர்பு குறித்தும், டெஹல்கா டாட் காம் சுமத்தியுள்ள ஊழல் குறித்துசரியான விளக்கம் அளிக்கும்படியும் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்தபின் அவர்கள் கமிஷன் முன்பு எப்போது ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என்பது குறித்துவெங்கடசாமி கமிஷன் தெரிவிக்கும்.

முன்னதாக நீதிபதி வெங்கடசாமி கூறுகையில், மத்திய அரசு கூறியதுபோல் ஆயுதப் பேர ஊழல் வழக்கை 4மாதங்களுக்குள் அதாவது ஜூலை 24 ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.ஆனால் இது மிகவும் குறுகிய கால அளவாகும்.

இதுதொடர்பான வீடியோ ஆதாரங்கள் உள்பட இதர ஆதாரங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டியுள்ளது.

ஆயுதப்பேர ஊழல் குறித்து டெல்லி போலீஸார் இணை கமிஷனர் கே.கே.பால் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளதனிப்போலீஸ் படை மூலம் ஏற்கனவே தனது விசாரணையைத் தொடங்கி விட்டனர்.

டெஹல்கா டாட் காம் ஆயுதப்பேர ஊழல் வழக்கு குறித்து 100 மணி நேரங்கள் ஓடக்கூடிய வீடியோ ஆதாரங்களைநீதிபதி வெங்கடசாமி கமிஷனுக்குக் கொடுத்துள்ளது.

இதே போல் என்டிடிவி, ஸீ டிவி, அஜ் டாக், தூர்தர்ஷன் ஆகிய தொலைக்காட்சிகள் வெளியிட்ட ஆயுதப் பேரஊழல் குறித்தான செய்திகள், வீடியோ ஆதாரங்களையும் வெங்கடசாமி கமிஷன் கவனித்து வருகிறது.

டெஹல்கா டாட் காம் ஆசிரியர் தருண் தேஜ்பால், ராணுவ செயலாளர் யோகேந்திரா நரெய்ன், உளவுத்துறைமுதன்மை செயலாளர் ஷியாமல் தத்தா, உள்துறை செயலாளர் கமல் பாண்டே, டெஹல்கா டாட் காம் நிருபர்கள்அனிருத் பால், மாத்யூ சாமுவேல் ஆகியோருக்கும் வெங்கடசாமி கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X