For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழர்களை கொன்று குவித்தவருக்கு ஆஸி.தூதர் பதவி

By Staff
Google Oneindia Tamil News

சிட்னி:

இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதராக இலங்கை ராணுவ முன்னாள் துணை அதிகாரி ஜானகா பெரேராநியமிக்கப்பட்டதற்கு ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களும், மனித உரிமை கழங்களும் போர்க்கொடிதூக்கியுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னர்தான் ஆஸ்திரேலியத் தூதராக பெரேரா நியமிக்கப்பட்டார் பெரேரா.

இதற்கு ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ் மக்கள் மற்றும் ஆஸ்திரேயாவின் எதிர்க்கட்சியான தொழிலாளர்கட்சியினர் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி, மெல்போர்ன், கான்பெரா உள்பட பல நகரங்களில் வாழும் மக்கள் அனைவரும்கான்பெராவில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதே போல் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர், வெளியுறவுத்துறை அமைச்சர் அலெக்சாண்டர்டோனரிடம், ஆஸ்திரேலியாவிற்கான இலங்கைத் தூதராக, பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள இலங்கைராணுவ அதிகாரியை எப்படி நியமிக்கலாம் என்று கேள்வி எழுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.

எதற்காக இந்தப் போராட்டங்கள்? ஆர்ப்பாட்டங்கள்?

விஷயம் இதுதான்.

பெரேரா மேல் தமிழர்களுக்கு எதிரான பல குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளன. ஆயிரக்கணக்கான இலங்கைத்தமிழர்கள் சாவுக்கும், காணாமல் போனதற்கும் இவர்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து, பிரிஸ்பேனில் வசித்து வரும் சிங்களர் பிரெய்ன் செனவர்த்தனே கூறுகையில், தற்போதுஆஸ்திரேலியாவிற்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் பெரேரா மேல் பல குற்றச்சாட்டுக்கள்உள்ளன.

மனித உரிமைகளை மீறியதாக, அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் இலங்கை அதிபர்சந்திரிகா குமாரதுங்காவின் உறவினர் என்பதால், இவருக்குத் தூதர் பதவி கிடைத்திருக்கலாம் என்றார்.

இலங்கையில் சில வருடங்களுக்கு முன்பு 600 முதல் 1000 வரையிலான அப்பாவித் தமிழ் மக்கள் ராணுவவீரர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்த சர்வதேச மனித உரிமைகள் குழுவில்இவரும் இடம்பெற்றிருந்தார். இவரும் ஒரு ராணுவ அதிகாரியாக இருந்த காரணத்தால், இந்தப் படுகொலைகள்குறித்து அவர் அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.

யாழ்ப்பாணம் அருகேயுள்ள செம்மனி ராணுவ முகாமில் நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் ராணுவவீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது ராணுவ கமாண்டராக இருந்தவர் பெரேரா.

இதே போல் 1995-96களில், யாழ்ப்பாணத்தில் 600 அப்பாவித் தமிழர்கள் காணாமல் போனதற்கு பெரேராவேகாரணம் என்று கூறப்படுகிறது. 1980 ம் ஆண்டு நடந்த படுகொலைச் சம்பவங்களில் பல தமிழர்கள்கொல்லப்பட்டதற்கும் பெரேராவே காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இவர் கடந்த ஜனவரி மாதம் வரை இலங்கை ராணுவ துணை அதிகாரியாக இருந்தார். கடந்த சில மாதங்களுக்குமுன்தான், இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதராக நியமிக்கப்பட்டார்.

வரும் ஆகஸ்ட் மாதம் பிரிஸ்பேனில் நடைபெற உள்ள காமன்வெல்த் நாடுகளுக்கான கூட்டத்தில்ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்கள் சார்பில் பெரேரா நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும்திட்டமிடப்பட்டுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X