For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தர்மபுரி மாவட்டம் 2 ஆக பிரிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தர்மபுரி மாவட்டத்தைப் பிரித்து கிருஷ்ணகிரியைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டம் அமைக்கப்படும் என்றுதமிழக சட்டசபையில் சனிக்கிழமை மாநில நிதியமைச்சர் சி.பொன்னையன் அறிவித்தார்.

2001-2002ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட் அறிக்கையை நிதியமச்ைசர் பொன்னையன் சனிக்கிழமை காலை 10.30மணியளவில் அவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டைத் தாக்கல் செய்து அமைச்சர் பேசியதாவது:

  • தோட்டக்கலை மற்றும் உணவு பதப்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்த புதிதாக வேளாண் வணிகத்துறை என்ற புதிய துறை உருவாக்கப்படும்.

  • 20 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்களை மேம்படுத்த புதிய திட்டம் கொண்டு வரப்படும். இத் திட்டத்தின்படி தரிசு நிலங்களில் எண்ணெய் வித்துக்கள் நடுவது, மரங்கள் நடுவது, நறுமணச் செடிகளைப் பயிரிடுவது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

  • நீர்வள ஆதாரங்களை மேம்படுத்த உலக வங்கி நிதியுதவியுடன் புதிய திட்டம்.

  • கால்நடைகளுக்கு உயிர் நாடியான மேய்ச்சல் நிலங்களில் கட்டிடங்கள் கட்ட தடை விதிக்கப்படும். அவசியம் ஏற்பட்டால் அரசு உத்தரவைப் பெற்றே மேய்ச்சல் நிலங்கள் மாற்றப்பட வேண்டும்.

  • கால்நடைப் பராமரிப்பு தொடர்பாக விவசாயிகளுக்கு ரூ. 3.36 கோடி செலவில் பயிற்சி அளிக்கப்படும். தமிழகம் முழுவதிலும் 336 ஊராட்சிகளில் இது அமல்படுத்தப்படும்.

  • கால்நடைகளுக்கு மருத்துவ வசதி அளிப்பதற்காக ரூ. 12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    கிராமப்புறங்களில் இளைஞர் சுய உதவிக் குழுக்கள் அமைத்து, இளைஞர்களிடையே சுய தொழில் மற்றும்

  • தன்னம்பிக்கையை வளர்க்க உதவி செய்யப்படும்.

  • மகளிர் சிறு கடன் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

  • கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஊராட்சி அலுவலகங்கள் அருகே ரூ. 60,000 மதிப்பில் அலுவலகங்கள் கட்டித்தரப்படும். அதன்படி ஆண்டுக்கு 4000 அலுவலகங்கள் கட்டப்படும்.

  • சட்டசபை உறுப்பினர் நிதியாக தற்போது ரூ. 77 லட்சம் வழங்கப்படுகிறது. இதை ரூ. 82 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 192.7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

  • அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தில் காடு வளர்ப்புத் திட்டம் மேற்கொள்ளப்படும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அமல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி 75,250 ஹெக்டேர் நிலப்பரப்பில் வனத் தோட்டங்கள் அமைக்கப்படும் என்றார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X