சிவாஜி தபால் தலை வெளியீடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளையொட்டி அவரது உருவப் படம் பொறித்த தபால் தலையைமத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் சென்னையில் திங்கள்கிழமை வெளியிட்டார்.

சென்னை மியூசிக் அகாடமி அரங்கில் திங்கள்கிழமை மாலை நடந்த இந்த நிகழ்ச்சி நடந்தது.

தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த கமலஹாசன், இளையராஜா, பாரதிராஜா, விஜயகாந்த் உள்ளிட்டோரும், மதிமுகபொதுச் செயலாளரும் சிவாஜி தபால் தலையை மத்திய அரசு வெளியிட முயற்சி எடுத்தவருமான வைகோஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பிரமோத் மகாஜன் தபால் தலையை வெளியிட அதை சிவாஜியின் மகனான நடிகர் பிரபு பெற்றுக் கொண்டார்.பின்னர் பிரமோத் மகாஜன் பேசுகையில்,

இந்தியாவில் 8-வது நடிகராக சிவாஜி கணேசனின் தபால் தலை வெளியிடப்படுகிறது. இதுவரை எத்தனையோநடிகர்கள் மராட்டிய மன்னன் சிவாஜி வேடமேற்று நடித்திருக்கிறார்கள்.

ஆனால் கணேசனுக்கு மட்டும்தான் "சிவாஜி" பட்டம் சூட்டப்பட்டது. இந்தப் பெருமை வேறு நடிகர்களுக்குக்கிடைக்கவில்லை.

அதிகபட்ச அளவில் இந்தியாவில் தேசபக்தி படங்களில் நடித்துள்ளது சிவாஜி கணேசன் மட்டுமே. எனவேசிவாஜிக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து பிரதமர் வாஜ்பாயுடன் நான் பேசுவேன் என்றார் அவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற