எதிர் படையில் சேரும் தலிபான் வீரர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜபல் சிராஜ் (வடக்கு ஆப்கானிஸ்தான்):

தலிபான் ராணுவத்திலிருந்து பலர் விலகி எதிர் படையினருடன் சேர்ந்து வருகின்றனர். சுமார் 10,000 தலிபான்கள் தங்கள் பக்கம்சேரத் தயாராக இருப்பதாக நார்த்தர்ன்ஸ் அலையன்ஸ் எதிர் படையினர் தெரிவித்துள்ளனர்.

நார்த்தர்ன் அலையன்ஸ் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அப்துல்லா கூறுகையில், தலிபான் அமைப்பைச் சேர்ந்த பல ராணுவகமாண்டர்களும் எங்களுடன் தொடர்பு கொண்டு வருகின்றனர். சுமார் 10,000 வீரர்களும் எங்களைத் தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் பரவியுள்ள தலிபான் ராணுவ வீரர்கள் அதைவிட்டு விலகிவிடத் தயாராக உள்ளனர்.

அமெரிக்காவுடன் சேர்ந்து நாங்கள் தலிபான்களைத் தாக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம். எங்களுடன் அமெரிக்காசேர்ந்தால் தலிபான்கள் கூட்டம் கூட்டமாக வந்து எங்களுடன் தரப்பில் சேர்ந்து விடுவார்கள்.

அமெரிக்கர்கள் எங்களுடன் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆப்கானிஸ்தானுக்கு வெளியே அவர்களுடன் எங்கள் படைத்தலைவர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர். பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுளளது. விரைவில் அமெரிக்கப்படைகளுடன் சேர்ந்து தலிபான்களைத் தாக்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற