அச்சிறுப்பாக்கம் அதிமுக எம்.எல்.ஏ. தேர்வு செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை:
அச்சிறுப்பாக்கம் அதிமுக எம்.எல்.ஏ. பூவராகமூர்த்தியின் தேர்வு செல்லுபடியாகும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அச்சிறுப்பாக்கம் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பூவராகமூர்த்தி வெற்றிபெற்றார்.
இந்நிலையில் அவரது தேர்வை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் ஆறுமுகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தார். அதில்,
எனக்கு 25 வயது பூர்த்தியாகவில்லை என்று காரணம் காட்டி வேட்பு மனுவைத் தள்ளுபடி செய்து விட்டார்கள்.
எனது வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் நான் தான் அச்சிறுப்பாக்கத்தில் வெற்றி பெற்றிருப்பேன்.
எனவே எனது வேட்பு மனுவை நிராகரித்தது செல்லாது என்றும், பூவராகமூர்த்தியின் தேர்வு செல்லுபடியாகாதுஎன்றும் உத்தரவிட வேண்டும் என்று அவர் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தங்கவேலு தன்னுடைய தீர்ப்பில்,
தனக்கு 25 வயது ஆகிறது என்பதற்கான தகுந்த ஆவணங்களை சமர்ப்பிக்க மனுதாரர் தவறியுள்ளார். எனவே 25வயது பூர்த்தியாகி விட்டது என்று மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது.
எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
மேலும் வழக்கு செலவுத் தொகையாக ரூ.2,000ஐ பூவராகமூர்த்திக்கு அளிக்கும்படி மனுதாரருக்குஉத்தரவிடுகிறேன் என்றார் நீதிபதி.
-->


