மார்ச் 30ல் சிபிஎம், ஏப் 6ல் சிபிஐ பட்டியல்

Subscribe to Oneindia Tamil

மார்ச் 26, 2006

உதயமானது ரஜினி மக்கள் கழகம்:
அதிமுகவுக்கு ஆதரவு

அதிமுக ஆதரவு பிரமுகரான ராமசாமி அம்பலத்தின் பக்க பலத்துடன் காரைக்குடியில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களின் ஒரு பகுதியினர் இன்று நடத்திய கூட்டத்தில், ரஜினி மக்கள் கழகம் என்ற கட்சி உதயமானது. இந்தக் கட்சியின் தலைவர் ரஜினிகாந்த் தான் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

புரளி கிளப்பும் உளவுத்துறை: விஜயகாந்த் புலம்பல்
நான் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டதாக உளவுத்துறையினர் புரளி கிளப்பி வருகின்றனர். மக்களை நம்பி, நான் தனியாகத்தான் போட்டியிடுகிறேன் என்று தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

நாளை அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் அதிமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாளை (திங்கள்கிழமை) அறிவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேப்பாக்கம்: கருணாநிதி Vs மில்லத் பேரன்?
அதிமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் சேப்பாக்கம் தொகுதியின் வேட்பாளராக காயிதே மில்லத்தின் பேரன் தாவூத் மியாகான் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மார்ச் 30ல் சிபிஎம், ஏப் 6ல் சிபிஐ பட்டியல்
பாமக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தீவிரமாக உள்ளார்

இனிமேல் சினிமாதான்: சரத்குமார் அறிவிப்பு
இனிமேல் சினிமாவில் தீவிர கவனம் செலுத்தப் போவதாக நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.

மீசையில மண் இல்லையே: திண்டிவனம்
அதிமுகவுடன் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. உறவு மிகச் சுமூகமாகவே இருக்கிறது என்று தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி கூறியுள்ளார்.

அதிமுக Vs திமுக-சிறுபான்மை அமைப்பு டமார்
தமிழ்நாடு, புதுவை சிறுபான்மையினர் கூட்டமைப்பு இரண்டாக உடைந்தது. பிஷப் பிரகாஷ் என்பவர் தலைமையிலான புதிய அமைப்பு அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது.

காங். வன்முறை: ராயபுரம் மனோ மீது வழக்கு
காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த பெரும் வன்றைச் சம்பவம் தொடர்பாக, வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ உள்ளிட்டோர் மீது சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வேலூர்: குளத்தில் மூழ்கி 4 சிறுமிகள் சாவு
வேலூர் மாவட்டம் வாணாபாடி கிராமத்தைச் சேர்ந்த நான்கு சிறுமிகள் குளத்தில் மூழ்கி மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தனர்.

தெலுங்கில் வேண்டுமாம் வாக்காளர் பட்டியல்
திராவிட தேசம் என்ற கட்சி, தமிழகத்தில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தெலுங்கு மொழியில் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

ஐஎன்டியூசி வேட்பாளர்கள் அறிவிப்பு
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐஎன்டியூசி யின் இரு வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

விரைவில் வேட்பாளர் பட்டியல்: கருணாநிதி
திமுக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

மார்ச் 25, 2006

காங். தலைமை அலுவலகத்தில் பயங்கர
வன்முறை: உருட்டுக் கட்டை தாக்குதல்!

சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செல்லக்குமாரின் ஆதரவாளர்களுக்கும், ராயபுரம் மனோவின் ஆதரவாளர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

அதிமுக Vs திமுக: 106 பரபரப்பு தொகுதிகள்
அதிமுகவும் திமுகவும் 106 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன.

அம்மா கொடுத்ததை வாங்கி கொண்ட வைகோ
பெரும் இழுபறிக்குப் பின் அதிமுக ஒதுக்கியுள்ள 35 தொகுதிகளும் தனக்கு பரம திருப்தியைத் தந்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

அதிமுகவுக்கு எதிராக அரசு ஊழியர்கள் பிரசாரம்
பதவியில் இருந்த காலத்தில் தங்களை பல வகையிலும் வாட்டி வதைத்த முதல்வர் ஜெயலலிதா அரசைக் கண்டித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சங்கம், அதிமுகவுக்கு எதிராக தனது பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது.

35ல் காங்கிரஸ்-அதிமுக நேருக்கு நேர்!!
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசும்-அதிமுகவும் 35தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன.

தேர்தல் விதிமீறல்: விஜயகாந்த் மீது வழக்கு
தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் நடிகர் விஜயகாந்த் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதிமுக Vs கம்யூனிஸ்ட்: மோதும் 15 தொகுதிகள்
திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் அதிமுக 15 இடங்களில் நேரடியாக மோதுகிகிறது.

26ல் பாமக Vs அதிமுக, 3ல் பாமக Vs மதிமுக
வட மாவட்டங்களில் பாமகவும் அதிமுகவும் நேரடியாக 26 இடங்களில் மோதுகின்றன.

முஸ்லீம் கட்சிகள் நேரில் மோதும் 2 தொகுதிகள்
திமுக, அதிமுக என இரு எதிரெதிர் அணிகளில் இடம் பெற்றுள்ள இஸ்லாமிய கட்சிகள் வாணியம்பாடியிலும் பாளையங்கோட்டையிலும் நேரடியாக மோதுகின்றன.

பாமக லபக்: திமுகவில் டென்சன் டென்சன்
விழுப்புரம் மாவட்டம் முகையூர் மற்றும் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதிகளை பாமகவுக்கு ஒதுக்கியதால் திமுகவினர் பெரும் கொந்தளிப்படைந்துள்ளனர்.

மதிமுக Vs கம்யூ, விடுதலை சிறுத்தை Vs காங்
அதிமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் வட மாவட்டங்களில் திமுகவுடன் 3 தொகுதிகளிலும், காங்கிரசுடன் 5 தொகுதிகளிலும் மோதுகிறது.

மொய்லி கொடும்பாவி-செல்லகுமார் நீக்கம்
தமிழக காங்கிரஸ் பார்வையாளர் வீரப்ப மொய்லியின் கொடும்பாவியை எரித்துப் போராட்டம் நடத்தியது தொடர்பாக முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏவும், இளைஞர் காங்கிரஸ் தலைவருமான டாக்டர் செல்லக்குமார் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

மதிமுக-காங்கிரஸ் மோதும் 9 தொகுதிகள்
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசும், அதிமுக கூட்டணியில் உள்ள மதிமுகவும் 15 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன.

மார்ச் 24, 2006

அதிமுக போட்டியிடும் 182 தொகுதிகள்
அதிமுக போட்டியிடும் 182 தொகுதிகளின் விவரத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.

மதிமுக போட்டியிடும் 35 தொகுதிகள் அறிவிப்பு!
திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை கருணாநிதி முந்திக் கொண்டு வெளியிட்டுவிட்டதால் அதிர்ச்சியில் ஆழ்ந்த முதல்வர் ஜெயலலிதா இன்று அவசர அவசரமாக தனது கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள், தேசிய லீக், ஐஎன்டியூசி
பார்வர்ட் பிளாக், ஐ.ஜ.தள தொகுதிகள்

அதிமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 9 தொகுதிகள் குறித்த விவரம்:

திமுக போட்டியிடும் 129 தொகுதிகள்
திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் கருணாநிதி வெளியிட்டுள்ளார்.

பாமக போட்டியிடும் 31 தொகுதிகள்
திமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 31 தொகுதிகள் விவரம்:

காங்கிரஸ் போட்டியிடும் 48 தொகுதிகள்

மார்க், இ.கம்யூ-முஸ்லீம் லீக்கின் 26 தொகுதிகள்
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இந்திய யூனியன் முஸ்லீம் லீகுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம்:

107 தொகுதிகளில் அதிமுக-திமுக நேரடி மோதல்
திமுக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. திமுக ற்ேறு இரவு வெளியிட்டது. இன்று காலை அதிமுக தனது பட்டியலை வெளியிட்டது.

31 முதல் ஜெ ஒரு மாதம் சூறாவளி பிரசாரம்!
முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தை வரும் 31ம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் தொடங்கி மே 6ம் தேதி கும்மிடிப்பூண்டியில் முடிக்கிறார். கிட்டத்தட்ட ஒரு மாதம் ஜெயலலிதா பிரச்சாரம் செய்யவுள்ளார்.

16ல் திமுக Vs மதிமுக, 1ல் பாமக Vs விசி
கூட்டணி மாறிய நிலையில் எதிர் முகாமிலிருக்கும் மதிமுகவுடன் திமுக நேரடியாக 16 தொகுதிகளில் மோதுகிறது. அதில் 6 தொகுதிகள் மதிமுக வலிமையாக உள்ள தென் மாவட்டத் தொகுதிகளாகும்.

திமுக நேர்காணல்: இன்றே கடைசி!
திமுக சார்பில் போட்டியிட சீட் கேட்டு மனு செய்துள்ளவர்களிடம் நடத்தப்பட்டு வரும் நேர்காணல் இன்றுடன் முடிகிறது.

தியாகம் செய்த திமுக கூட்டணிக் கட்சிகள்
தொகுதிப் பங்கீட்டில் திமுகவை விட கூட்டணிக் கட்சிகள் தான் அதிக அளவில் விட்டுக் கொடுத்து, தியாகம் செய்து தொகுதிகளை மாற்றிக் கொண்டுள்ளன.

அதிமுக சீட் தரும்: நம்பிக்கையுடன் டி.ஆர்!!
முதல்வர் ஜெயலலிதா சொன்னார் என்பதற்காக காங்கிரஸ் கட்சியை உடைக்கிறேன் பேர்வழி என்று தனி ஆளாக கட்சியை விட்டு விலகி, அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த திண்டிவனம் ராமமூர்த்திக்கு தனது கூட்டணியில் ஜெயலலிதா சீட் தரவில்லை.

v•P&P�꡶uEhߣPx!
-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+