For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நினைவுகள் - 2007

By Staff
Google Oneindia Tamil News

மனதிலிருந்து விலக்க முடியாத பல அழுத்தமான நினைவுகளுடன் 2007 விடைபெறுகிறது.

சதாம் உசேன் என்ற உலகை உலுக்கிய மனிதரின் இழப்புடன் 2007 தொடங்கியது. அதேபோல, பெனாசிர் பூட்டோ இல்லாத உலகத்துடன் 2008 தொடங்கவுள்ளது.

அரசியல், சமுதாயம், பொருளாதாரம் என பல்துறைகளிலும் பலவித நிகழ்வுகளுடன் வேக நடை போட்ட 2007 முடிவுக்கு வந்துள்ளது.

2007 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்:

ஜனவரி:

ஜன. 1 - திமுக கூட்டணியிலிருந்து விலகினாலும், மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் மதிமுக நீடிக்கும் என வைகோ அறிவித்தார்.

- தமிழகத்தில் வாட் வரி விதிப்பு அமலுக்கு வந்தது.

- உத்தராஞ்சல் மாநிலத்தின் பெயர் உத்தரகாண்ட் என மாற்றப்பட்டது.

- மதுரையைச் சேர்ந்த சித்ரா பரூச்சா, பிபிசி நிறுவனத்தின் செயல் தலைவராகப் பொறுப்பேற்றார்.

- ஐ.நா. பொதுச் செயலாளராக பான் கி மூன் பொறுப்பேற்றார்.

- ஈராக்கில் 3,000மாவது அமெரிக்க வீரர் பலியானார்.

ஜன. 2 - அமைச்சர் கோ.சி.மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜன. 3 - ஓராண்டுக்கும் மேலாக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவகாசி ஜெயலட்சுமி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

- அமைச்சர் பொன்முடி மீது அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட 3 வழக்குகள் விழுப்புரம் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன.

- மோசடி பிஷப் ஆனந்தராஜின் ரூ. 2 கோடி மதிப்புள்ள கார், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

- திருச்சி, ஸ்ரீரங்கம் பெரியார் சிலை மீதான தாக்குதல் வழக்கில் கைதான இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

- அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது.

ஜன. 4 - சென்னை மாநகர காவல்துறையின் 150வது ஆண்டு விழா முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது.

ஜன. 8 - அஸ்ஸாமில் இந்தி பேசுவோருக்கு எதிராக பயங்கர வன்முறை வெடித்தது. 69 பேர் பலியானார்கள்.

ஜன. 9 - கோவில்கள், தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவோர், தாக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி எச்சரித்தார்.

- உரிய பாதுகாப்புகளுடன் ஜல்லிகட்டை நடத்த மதுரை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

ஜன. 10 - சென்னையில் மதிமுக பொதுக் குழுக் கூட்டம் பலத்த பரபரப்புக்கு இடையே நடந்தது.

- பண மோசடி வழக்கில் நடிகை குஷ்புவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.

- நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட 11 எம்.பிக்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டனர்.

ஜன. 11 - நொய்டா அருகே நித்தாரி கிராமத்தில் நடந்த சிறார் படுகொலைச் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை தொடங்கியது.

ஜன. 12 - கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக எம்.பியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜன. 13 - முன்னாள் அதிமுக அமைச்சர் செம்மலை மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மருமகள் வாணிப்ரீத்தா வரதட்சணை புகார் கொடுத்தார்.

ஜன. 14 - சென்னையில் இலவச எரிவாயு, அடுப்பு திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

ஜன. 17 - சென்னை மாநகராட்சி தேர்தலில் நடந்த வன்முறை தொடர்பான வழக்கில் இரு நீதிபதிகளும் முரண்பாடாக தீர்ப்பளித்தனர். இதை மதித்து திமுக கூட்டணி கவுன்சிலர்கள் ராஜினாமா செய்து தேர்தலை சந்திப்பார்கள் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

ஜன. 19 - சட்டீஸ்கர் மாநில ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த நரசிம்மன் நியமிக்கப்பட்டார்.

ஜனவரி 20 - உள்ளாட்சி இடைத் தேர்தலை மதிமுக புறக்கணிக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார்.
புறக்கணிக்கும் என்று வைகோ கூறியுள்ளார்.

- நாமக்கல் முட்டைகளுக்கு யு.ஏ.இ. விதித்த தடை நீக்கப்பட்டது.

- அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னோட்டமாக ஹில்லாரி கிளின்டன் பிரசாரத்தைத் தொடங்கினார்.

ஜன. 21 - சென்னையில் நடந்த விழாவில் பங்கேற்க வந்த சத்ய சாய்பாபா முதல்வர் கருணாநிதி வீட்டுக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆசி வழங்கினார்.

- விஜயகாந்த் கல்யாண மண்டபம் கையகப்படுத்துவது தொடர்பான வழக்கில், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

ஜன. 22 - 3 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி7 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஸ்பேஸ் கேப்சூல் ரெக்கவரி சோதனை சாதனம் (எஸ்.ஆர்.இ) 11 நாட்கள் விண்ணில் சுற்றிய பின் வெற்றிகரமாக கடலில் தரையிறங்கியது.

- சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு மீண்டும் போட்டியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கும் சட்டத் திருத்தம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

- விஜயகாந்த், ஜேப்பியார் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்கள், கல்லூரிகளில் வருமான வரி சோதனை நடந்தது.

- கட்டாக் நகருக்கு வந்த இந்திய அணியின் பயிற்சியாளர் கிரேக் சேப்பலை மர்ம ஆசாமி தாக்கினார்.

- பாக்தாத்தில் நடந்த 2 பயங்கர கார் குண்டு வெடிப்புகளில் 90 பேர் கொல்லப்பட்டனர்.

ஜன. 23 - சேது சமுத்திரத் திட்ட கடல் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த கப்பல், ராமர் பால திட்டுகளை உடைத்துக் கொண்டிருந்தபோது அதன் கருவி உடைந்தது.

- சென்னையிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களுக்கான உதிரிப் பாகங்களை அனுப்பியதாக 8 இலங்கைத் தமிழர்கள் உள்பட 12 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஜன. 24 - சென்னை மாநகராட்சி தேர்தல் வன்முறை வழக்கை விசாரிக்க 3வது நீதிபதியாக பி.கே.மிஸ்ரா அறிவிக்கப்பட்டார்.

ஜன. 25 - கல்பாக்கம் அருகே நடந்த சாலை விபத்தில் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி காயமின்றி தப்பினார்.

- சென்னை மாநகராட்சியின் 98 வார்டுகளுக்கான மறு தேர்தலை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்தது.

- என்னை ஒழித்துக் கட்ட சதி நடக்கிறது, அதன் ஒரு பகுதியாகவே வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது என தேமுதிக தவைரும் நடிகருமான விஜய்காந்த் கூறினார்.

- குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தனது பதவிக்காலத்தின் கடைசி குடியரசு தின உரையை நிகழ்த்தினார்.

- நொய்டாவில் 30க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியரை கொடூரமாகக் கொன்று புதைத்த மொஹீந்தர் சிங், சுரேந்தர் கோலி ஆகியோரை வக்கீல்களும், பொதுமக்களும் சேர்ந்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

ஜன. 27 - சேது சமுத்திரத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.

ஜன. 28 - இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி உடைந்தது. 18 அதிருப்தி எம்.பிக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

ஜன. 29 - லண்டன், பிக் பிரதர் நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா ஷெட்டி வெற்றி பெற்றார்.

- ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவியின் கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனியின் மகன் தங்க மாங்கனி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

- சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கான இடைத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

ஜன. 30 - பாஜக தேசிய செயலாளராக முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பியுமான திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டார்.

- ஆங்கிலோ-டச்சு எஃகு நிறுவனமான கோரஸ் நிறுவனத்தை, டாடா நிறுவனம் ரூ. 54,000 கோடிக்கு வாங்கியது.

- அல் கொய்தா தலைவர் ஓசாமா பின்லேடனின் மைத்துனர் ஜமால் கலீபா, மடகாஸ்கரில் உள்ள அவரது வீட்டில் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜன. 31 - நாகையில் நடந்த நிகழ்ச்சியில் 450 இலவச வீடுகளை மாதா அமிர்தானந்த மயி முன்னிலையில் முதல்வர் கருணாநிதி பயனாளிகளுக்கு வழங்கினார்.

பிப்ரவரி:

பிப். 1 - குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பயணம் செய்யவிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்து போலீஸாரை அலைக்கழித்த வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 4 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

- பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் ஆந்திர மாநிலம் கணேசபுரம் அருகே கட்டப்படவுள்ள பாலாறு அணைப் பகுதிக்குச் செல்ல முயன்ற பாமகவினருக்கும், ஆந்திர மாநில விவசாயிகளுக்கும் இடையே மோதல் மூண்டது.

- ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சித் தலைவி சுந்தரியின் கணவரும் திமுக பிரமுகருமான அண்ணாதுரை செல்வன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தாமரைக்கனியின் 2வது மகன் ஆணழகன் கைது செய்யப்பட்டார்.

பிப். 3 - ஓமலூரில் பள்ளி மாணவி மர்மமான முறையில் இறந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க விசாரணைக் கமிஷனை தமிழக அரசு அறிவித்தது.

- சென்னை மாநகராட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் தீர்ப்பளித்தது.

- தமிழக முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசிக்காமல் பாலாற்றின் குறுக்கே அணை கட்டப்பட மாட்டாது என்று ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டி அறிவித்தார்.

பிப். 5 - காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியானது.

- உயர்நீதிமன்ற நீதிபதிகள் கட்டப்பஞ்சாயத்து நடத்தக் கூடாது என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி காட்டமாக விமர்சித்தார்.

- மதுரை மேற்குத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ எஸ்.வி.சண்முகம் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

- விண்வெளியில் அதிக நேரம் நடந்த முதல் வீராங்கனை என்ற பெருமையை விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பெற்றார்.

- சேலம் ரயில்வே கோட்டத்தை எதிர்த்து பாலக்காட்டில், கோவை வழியாக செல்லும் ரயில்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

பிப். 6 - சேலம் ரயில் கோட்ட வணிகப் பிரிவுக்கான அலுவலராக ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. கோட்ட அலுவலகமும் திடீரென திறந்து வைக்கப்பட்டது.

பிப். 7 - அமெரிக்காவின் பெப்சிகோ நிறுவனத்தின் தலைவராக இந்திய, அமெரிக்கரான இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை திமுகவினர் மிரட்டுவதாக விஜயகாந்த் புகார் கூறினார்.

- இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மாலை அணிவித்த கோவில் பூசாரி ெசல்லையா பரமேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பிப். 8 - சென்னை திருவான்மியூரில் பூட்டிய வீட்டுக்குள் கணவன், மனைவி மற்றும் 3 மகள்கள் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டனர்.

- இந்தியாவுடனான போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி வீரர் மர்லான் சாமுவேல்ஸ் மீது புகார் எழுந்தது.

- சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் உள்பட 33 பேர் போட்டியின்றித் தேர்வு பெற்றனர்.

- முன்னாள் டிஜிபியும், இலக்கியவாதியுமான பொன்.பரமகுரு சென்னையில் மரணமடைந்தார்.

பிப். 9 - ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினியின் மகள் ஆரித்ரா, இந்தியாவில் தங்கி படிக்க விசா கிடைக்கததால் நார்வே சென்றார்.

- த இந்து நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், நாளிதழை நடத்தும் கஸ்தூரி அண்ட் சண்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவருமான எஸ்.ரங்கராஜன் சென்னையில் காலமானார்.

பிப். 10 - ஆந்திராவுக்கு ஷூட்டிங் சென்ற இடத்தில், நடிகை ப்ரீத்தி வர்மா தனது காதலருடன் தப்பி தலைமறைவானார்.

பிப். 11 - பிலிப்பைன்ஸ் தலைவர் மணிலாவில், 6000 காதல் ஜோடிகள் ஒன்று கூடி முத்தமிட்டு புதிய சாதனை படைத்தனர்.

பிப். 12 - முன்னாள் சபாநாயகர் சி.பா. ஆதித்தனாரின் மூத்த மகனும், மாலை முரசு நாளிதழ் அதிபருமான பா.ராமச்சந்திரன் ஆதித்தன் மீது பண மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

- நடிகை தேவிப்பிரியா வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர்.

- காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைக் கண்டித்து கர்நாடகத்தில் முழு அடைப்பு நடந்தது.

பிப். 16 - கோவை வேளாண்மைக் கழக மாணவிகள் பஸ்சோடு சேர்த்து திமுகவினரால் எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 அதிமுகவினருக்கு தூக்குத் தண்டனையும், 25 பேருக்கு தலா 7 ஆண்டு தண்டனையும் விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பிப். 17 - பல ஆயிரம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக பிரபல விபச்சார புரோக்கர் கன்னட பிரசாத் சென்னையில் கைதானார்.

பிப். 18 - சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கான இடைத் தேர்தல் இன்று நடந்தது.

- சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்தது. 68 பேர் பலியானார்கள்.

பிப். 19 - காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது.

பிப். 20 - சென்னை மாநகராட்சியின் 67 வார்டுகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் திமுக கூட்டணியினர் 59 இடங்களில் வெற்றி பெற்றனர்.

பிப். 24 - கோவையில் டைடல் பூங்காவுக்கு முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.

பிப். 26 - சென்னையில் ரூ. 4000 கோடியில் மஹிந்திரா கார் தொழிற்சாலை அமைக்க முதல்வர் கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

பிப். 27 - பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் பாஜக - அகாலிதள் கூட்டணி ஆட்சி அமைந்தது. உத்தரகாண்டில் பாஜகவும், மணிப்பூரில் காங்கிரஸும் ஆட்சி அமைத்தன.

பிப். 28 - சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியைச் சேர்ந்த ஜம்மு கான் என்கிற மன நோயாளியின் வயிற்றில் 200க்கும் மேற்பட்ட இரும்புப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.

மார்ச் :

மார்ச். 1 - தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மற்றும் டைரக்டர் சரண் வீட்டில் வருமான வரித் துறையின் சோதனை நடத்தினர்.

- இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்பிக்கள் சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்த் ஆகியோர் சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியை சந்தித்து பேசினர்.

- சென்னை மாநகராட்சி மேயராக மீண்டும் மா.சுப்ரமணியம் தேர்வு செய்யப்பட்டார்.

மார்ச். 2 - இரு கேஸ் இணைப்புகளைக் கொண்ட குடும்பங்களுக்கு ரேஷன் கார்டு கிடையாது என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

- பின்லேடன் உயிருடன் இருப்பதாக தலிபான் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான முல்லா ததுல்லா கூறியுள்ளார்.

- கேசட் கடை அதிபர் வில்லியம் ஐசக்கின் 2வது மனைவி ஹேமமாலினி கொடுத்த கொலை மிரட்டல் வழக்கில் ஐசக்கும், நடிகை தேவிப்பிரியாவும் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரணடைந்து முன்ஜாமீன் பெற்றனர்.

- பயிற்சி தருவதாக கூறி பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த டென்னிஸ் பயிற்சியாளர் சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

- இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை கொழும்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மார்ச் 3 - விபச்சார புரோக்கர் கன்னட பிரசாத் மீது மேலும் 3 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மார்ச் 4 - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.பியுமான சுனில் மஹதோ, நக்சலைட்டுக்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மார்ச் 6 - சென்னையிலிருந்து கரூர் வழியாக மங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து ஈரோடு அருகே திருப்பூர், கோவைக்கு வேலைக்கு செல்லும் நூற்றுக்கணக்கான பயணிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

- சென்னை வடபழனியில் திரைப்பட இயக்குனர் செல்வா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரை கொலை செய்ததாக புதுமுக நடிகை சங்கீதா கைது செய்யப்பட்டார்.

மார்ச் 7 - ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியான நளினியின் மகள் ஆரித்ரா இந்தியா வர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

மார்ச் 8 - முஸ்லீம்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி டெல்லியில் தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் பேரணி நடைபெற்றது.

- வேலூரில் தேமுதிக மகளிர் அணி மாநாடு நடந்தது.

மார்ச் 9 - விடுதலைப் புலிகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவி செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி முகர்ஜி எச்சரிக்கை விடுத்தார்.

- விபச்சார புரோக்கர் கன்னட பிரசாத்துக்கு ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்தது.

- உரிய பாதுகாப்புடன் ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை அனுமதி வழங்கியது.

- இலங்கை கடற் பகுதியில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமம் (லைசன்ஸ்) வழங்க இலங்கை அரசு தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகின.

மார்ச் 14 - மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் விவசாயிகள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்.

மார்ச் 16 - முலாயம் சிங் மீதான ஊழல் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறி வழக்கிலிருந்து விடுவித்துக் கொண்டார்.

மார்ச் 18 - தென் ஆப்பிரிக்காவில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப் உல்மர் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

- காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசு கெஜட்டில் வெளியிடக் கோரி சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது.

மார்ச் 19 - பாகிஸ்தான் தலைமை நீதிபதி இப்திகார் முகம்மது சவுத்ரியை முஷாரப் அதிரடியாக பதவிநீக்கம் செய்தார்.

மார்ச் 23 - குளித்தலை ஆசிரியை மீனாட்சி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மார்ச் 24 - பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்து மதத்தைச் சேர்ந்த நீதிபதி பகவான்தாஸ் ராணா பொறுப்பேற்றார்.

மார்ச் 25 - கொழும்பு அருகே உள்ள கட்டுநாயகே விமான தளத்தின் மீது, விடுதலைப் புலிகள் முதன் முறையாக விமான தாக்குதல் நடத்தி உலகையே அதிர வைத்தனர்.

மார்ச் 29 - தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 5 மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றது.

- உயர் கல்வியில் பிற்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மார்ச் 31 - 27 சதவீத இட ஒதுக்கீட்டை தடை செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்து தமிழகத்தில் பந்த் நடைபெற்றது.

ஏப்ரல்:

ஏப். 1 - குமரி மாவட்ட மீனவர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதினார்.

- இலங்கை அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்கவில்லை. எனவே இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பே இல்லை என்று விடுதலைப் புலிகள் அரசியல் தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் அறிவித்தார்.

ஏப். 2 - மேற்கு வங்க சட்டசபையில் பயங்கர அமளி. மேஜை, நாற்காலிகள் உடைப்பு. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு ரூ. 3.97 லட்சம் அபராதம் விதிப்பு.

- குமரி மாவட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூட்டில் இறந்ததைக் கண்டித்து தேமுதிக தலைவர் விஜய்காந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஏப். 3 - முன்னாள் ராணுவ வீரருக்கு கை விலங்கிட்டு தெருவில் ஊர்வலமாக இழுத்துச் சென்ற வழக்கில் எஸ்.பி. பிரேம்குமாருக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை 1 மாதம் சிறைத் தண்டனை விதித்தது.

ஏப். 4 - இயக்குநர் ஷங்கரின் நீலாங்கரை பண்ணை வீட்டில் விடிய விடிய நடந்த மது விருந்தில், அளவுக்கு அதிகமாக மது அருந்தி நீச்சல் குளத்தில் விழுந்து சிவாஜி பட ஒலிப்பதிவாளர் சச்சிதானந்தம் உயிரிழந்தார்.

ஏப். 5 - தமிழக சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது. செருப்பைக் காட்டி ரகளை செய்ததாக அதிமுக எம்.எல்.ஏ வி.பி.கலைராஜன் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஏப். 6 - சேலம் ரயில் கோட்டம் ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்கப்படும் என ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு அறிவித்தார்.

ஏப். 7 - விழுப்புரம் அருகே செந்தூர் என்ற இடத்தில் காரில் கொண்டு செல்லப்பட்ட வெடிபொருட்கள் வெடித்துச் சிதறியதால், 20 பேர் பலியாயினர். 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. 50க்கும் மேற்பட்டோர் காயமைடந்தனர்.

- டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி.

- சென்னை விமான நிலையத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் ஆதரவாளர்கள், கட்சியின் மேலிடப் பார்வையாளர் வீரப்ப மொய்லியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

ஏப். 8 - கொல்கத்தாவில் நடந்த சாலை விபத்தில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி படுகாயம் அடைந்தார்.

வெடி விபத்து: ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணைக் கமிஷன் - கருணாநிதி அறிவிப்பு

ஏப். 9 - விழுப்புரம் வெடிவிபத்து தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

ஏப். 11 - முன்னாள் தமிழக அமைச்சர் ப.உ. சண்முகம் சென்னையில் காலமானார்.

- ஸ்ரீரங்கத்தில் தமிழக அரசின் புதிய சட்டத்தின் கீழ் அனைத்து தியினருக்கான வேத ஆகம பயிற்சிக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு நேர்காணல் நடந்தது.

- விவசாய விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ராஜ்யசபா எம்பியாக நியமிக்கப்பட்டார்.

ஏப். 12 - சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து மத்திய அமைச்சர் ரகுபதியும் அவரது குடும்பத்தினரும் விடுவிக்கப்பட்டனர்.

ஏப். 15 - காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்கு பாதகமாக உள்ள அம்சங்களை நீக்கக் கோரி மறு ஆய்வு மனு தாக்கல் செய்வது குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.

- அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்த மாபெரும் மராத்தான் போட்டியில், விண்ணிலிருந்தபடி கலந்து கொண்டு டிரெட் மில்லில் ஓடினார் சுனிதா வில்லியம்ஸ்.

- டெல்லியில் நடந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொது மேடையில் நடிகை ஷில்பா ஷெட்டியை வளைத்துப் பிடித்து வாயில் முத்தமிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரே.

ஏப். 16 - ராமர் பாலம் ஒரு கட்டுக்கதை என மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறினார்.

- சாலை விபத்தில் காயமடைந்து வலது கரத்தை இழந்த முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார்.

ஏப். 17 - அமெரிக்காவின் விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் தென் கொரிய மாணவர் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் லோகநாதன், குஜராத் மாணவி மினால் உள்ளிட்ட 32 பேர் பலியானார்கள்.

- 4 தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

ஏப். 18 - சட்டசபையில் கலைஞர் பொன்விழாவின் ஒரு பகுதியாக சட்டசபையில் உரையாற்ற வருமாறு தமிழக சட்டசபை சபாநாயகர் விடுத்த வேண்டுேகாளை ஏற்க முடியாத நிலை இருப்பதாக குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்தார்.

- சிறுநீரகத் திருட்டு தொடர்பாக சென்னையைச் சேர்ந்த இரு மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறினார்.

- மனைவியின் பாஸ்போர்ட் மூலம் வேறு ஒரு பெண்ணை கனடாவுக்கு அழைத்துச் செல்ல முயன்றதாக குஜராத் பாஜக எம்.பி. பாபு பாய் கத்தாரா டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

ஏப். 19 - சென்னை அயனவாரத்தில் பூட்டிய காருக்குள் இரண்டு வாலிபர்கள் பிணமாகக் கிடந்தனர். காருக்குள் ஏற்பட்ட விஷ வாயுவில் சிக்கி அவர்கள் பலியாகியிருக்கலாம் என கருதப்பட்டது.

- ஜெயா டிவியை முடக்கும் முயற்சியில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மூலம் திமுக முயற்சி செவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

- பாக்தாத் அருகே நடந்த 4 கார் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 200க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.

ஏப். 20 - சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 13 பேர் நிரந்தர நீதிபதிகளாக்கப்பட்டு இன்று பதவியேற்றனர்.

- நடிகர் அபிஷேக் பச்சன் கல்யாணம் செய்து கொள்வதாக கூறி, தகாத முறையில் நடந்து கொண்டு ஏமாற்றி விட்டதாக கூறி இந்தி துணை நடிகை ஜான்வி கபூர் என்பவர் அமிதாப் பச்சன் வீட்டின் முன்பு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏப். 22 - அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, உத்திர பிரதேச மாநிலம் பரேலியில், சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவாக இந்தியில் பேசி பிரசாரம் செய்தார்.

ஏப். 23 - முன்னாள் ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ட்சின் மரணமடைந்தார்.

ஏப். 24 - 100 கோடி பேரின் ஜாதகத்தை 2 அல்லது 3 பேர் சேர்ந்து நிர்ணயிப்பது ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய கேடு என்று இட ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து முதல்வர் கருணாநிதி கருத்து ெதரிவித்தார்.

- பலாலி விமான படைத் தளம் மீது புலிகள் 2வது முறையாக விமான தாக்குதல் நடத்தி பல விமானங்களை சேதப்படுத்தினர்.

ஏப். 25 - விமானப்படையின் பவளவிழாவையொட்டி மதுரையில் முதன் முதலாக விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

- தேசியக் கொடியை அவமதித்ததாக எழுந்த சர்ச்சை குறித்து சச்சின் டெண்டுல்கரிடம் விசாரணை நடத்த தனிப் படை அமைக்கப்பட்டது.

- சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனத்திற்கு எதிராக போளூர் வரதன் தலைமையில் 13 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தி ரகசியக் கூட்டம் போட்டனர்.

ஏப். 27 - விருதுநகரில் காமராஜர் மணி மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் சரத்குமார் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

- கருணாநிதியின் சொல்லைக் கேட்டு மக்கள் விரோத பாணியில் செயல்பட்டால் அதற்கான கடும் விளைவுகளை காவல்துறையினர் சந்திக்க வேண்டுடியிருக்கும் என எச்சரிக்கை விடுத்தார் ஜெயலலிதா.

- வீரப்பன் உளவாளி ஹோட்டல் அதிபர் கந்தவேல் கொலை வழக்கில் நக்கீரன் ஆசிரியர் கோபால், நிருபர்கள் சிவசுப்ரமணியம், ஜீவா தங்கவேல் உள்ளிட்ட 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

- நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஏப். 28 - இலங்கையை வீழ்த்தி தொடர்ச்சியாக 3வது முறையாகவும், ஒட்டுமொத்தமாக 4வது முறையும் ஆஸ்திரேலியா உலகக் கோப்பை சாம்பியன் ஆனது.

ஏப். 29 - சன் டிவி குழுமத்திலிருந்து புதிதாக சுட்டி டிவி பிறந்தது.

- கொழும்பு நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடுதலைப் புலிகள் தங்களது இலகு ரக விமானங்கள் மூலம் அதிரடித் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பெட்ரோல் சேமிப்புக் கிட்டங்கி எரிந்து நாசமானது.

- காஞ்சிபுரம் அருகே அகரம் என்ற இடத்தில் ஆளில்லாத ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற வேன் மீது ரயில் மோதியதில் 9 கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட 11 பேர் பலியானார்கள்.

ஏப். 30 - ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவி சுந்தரியின் கணவர் அண்ணாத்துரை செல்வன் கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன் மதுரை கோர்ட்டில் சரணடைந்தார்.

மே:

மே 1 - பெரியார் திரைப்படம் தமிழகம் முழுவதும் ரிலீஸானது.

- ஒரிரு மாதங்களில் புதிய கட்சி தொடங்குவேன் என்று நடிகர் சரத்குமார் அறிவித்தார்.

மே 2 - அட்டென்டன்ஸ் இல்லாததால் முதல்வர் கருணாநிதியின் பேரன் மற்றும் அமைச்சர்களின் பேரன்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

- சென்னையில் ரூ.125 கோடி செலவில் செம்மொழி தமிழ் ஆய்வு மையம் அமைக்கப்படும் என அமைச்சர் அன்பழகன் சட்டசபையில் தெரிவித்தார்.

மே 4 - கென்யாவிலிருந்து சென்ற பயணிகள் விமானம் காமரூன் நாட்டில் விழுந்து நொறுங்கியதில் இந்தியர்கள் உள்பட அதில் பயணம் செய்த 114 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மே 6 - அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

மே 7 - தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் சிறந்தவர் யார் என்று தினகரன் நாளிதழ் நடத்திய கருத்துக் கணிப்பு என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

- ராமர் பாலப் பகுதிக்கு சுப்ரமணியன் சுவாமியின் மனைவி ரக்ஷ்னா யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் படகில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மே 8 - ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட பிரதமர் மன்மோகன் சிங் குவஹாத்தியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

- தினகரன் கருத்துக் கணிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முதல்வர் கருணாநிதி கீழ்த்தரமான அரசியல் நடத்துகிறார் என்று காட்டமாக விமர்சித்தார்.

மே 9 - தினகரன் நாளிதழ் நடத்திய கருத்துக் கணிப்பில், கருணாநிதியின் அரசியல் வாரிசாக ஸ்டாலின் வர வேண்டும் என 70 சதவீதம் பேரும், 2 சதவீதம் பேர் மட்டுமே அழகிரி என்றும் கூறியதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

- கருத்துக் கணிப்பைக் கண்டித்து மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தின் மீது அழகிரியின் ஆதரவாளர்கள் பயங்கர தாக்குதல் நடத்தினர். அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டதில் 3 பேர் பலியானார்கள். மதுரை நகரிலும் வன்முறை தாண்டவமாடியது.

- முதல்வர் கருணாநிதியின் சட்டசபை பொன்விழா கொண்டாட்டம் சரியானதே என்று பேட்டி அளித்த முன்னாள் எம்.எல்.ஏவும் அதிமுக சட்டமன்ற ஆலோசகருமான க.சுப்பு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

- பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்ந்த கோரி மதுரையில் போராட்டம் நடத்திய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. ெநடுமாறன் கைது செய்யப்பட்டார்.

- மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு தொடங்கியது.

மே 10 - மதுரை தினகரன், சன் டிவி அலுவலகம் மீது நடந்த தாக்குதல் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

மே 12 - தமிழக சட்டசபையில் முதல்வர் கருணாநிதியின் அரசியல் பொன்விழா கொண்டாடப்பட்டது. லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி உரை நிகழ்த்தினார்.

மே 13 - நான்காவது முறையாக உ.பி. முதல்வராக மாயாவதி இன்று பதவியேற்றார்.

மே 14 - மத்திய அமைச்சர் பதவியை தயாநிதி மாறன் ராஜினாமா செய்தார்.

- ராயல் சொசைட்டி ஆப் லண்டன் அமைப்பின் கிங் சார்லஸ் விருது அப்துல் கலாமுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மே 15 - மத்திய தொலைத் தொடர்புத் துறை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜாவுக்கு ஒதுக்கப்பட்டது. ராதிகா செல்வி அமைச்சரானார்.

- தா.கிருட்டிணன் கொலை வழக்கை மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

மே 16 - தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்தை இடிக்கும் பணி தொடங்கியது.

மே 17 - குஜராத் போலி என்கவுண்டர் கொலை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுத்தது.

மே 18 - ஹைதராபாத் மெக்கா மசூதியில் குண்டுவெடித்தது. 12 பேர் பலியானார்கள்.

மே 19 - மதுரை தினகரன், சன் டிவி அலுவலகம் மீதான தாக்குதல் குறித்த சிபிஐ விசாரணை தொடங்கியது.

மே 23 - திருப்பூரில் டாஸ்மாக் மதுக் கடை அருகே இருந்த மதில் சுவர் இடிந்து விழுந்ததில் மது அருந்திக் கொண்டிருந்த 29 தொழிலாளர்கள் பலியானார்கள்.

மே 22 - திமுகவின் சார்பில் கலைஞர் டிவி ஆரம்பிக்கப்படுவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

மே 26 - மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இன்னொரு வேட்பாளராக திருச்சி சிவா அறிவிக்கப்பட்டார்.

மே 29 - ரவுடி வெள்ளை ரவியின் காதலி நடிகை சோனியா கைது செய்யப்பட்டார்.

மே 31- கோடநாடு எஸ்டேட்டில் போலீஸ் உதவியுடன் வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனையிட்டனர்.

ஜூன்:

ஜூன் 3 - அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தை விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டதாக கூறி அதை ஏன் இடிக்கக் கூடாது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஜூன் 7 - கோவையில் இறந்து போன தம்பிக்கு உயிர் கொடுப்பதாக கூறி குடும்பத்துடன், தம்பி பிணத்தை வைத்து 60 நாட்களாக ஜெபம் செய்து வந்த பாதிரியார் சார்லஸ் கைது செய்யப்பட்டார்.

ஜூன் 8 - திருப்பதியில் பிற மதத்தினர் மதப் பிரசாரத்தில் ஈடுபட மாநில அரசு தடை விதித்து அவசரச் சட்டம் பிறப்பித்தது.

ஜூன் 13 - மகாத்மா காந்தியின் பேரன் ராமச்சந்திர காந்தி, டெல்லி ஹோட்டலில் பிணமாகக் கிடந்தார்.

ஜூன் 15 - மாநிலங்களவைத் தேர்தலில் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து பிரதமர் மன்மோகன் சிங் எம்.பி. ஆக தேர்வு செய்யப்பட்டார்.

ஜூன் 18 - சென்னையில் ஜெயலலிதா வீட்டில் 3வது அணி உருவானது. ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி என கூட்டணிக்குப் பெயரிடப்பட்டுள்ளதாக ஜெயலலிதா அறிவித்தார்.

ஜூன் 19 - ராமர் பாலத்தை இடிப்பதற்குத் தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

ஜூன் 21 - சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு வழக்கில் 3 பேருக்கு ஆயுள், 7 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை, ஒருவருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

ஜூன் 23 - விண்ணில் 195 நாட்கள் தங்கியிருந்த புதிய சாதனையுடன் பூமிக்கு பத்திரமாக திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்.

ஜூன் 25 - பிளஸ் 1 சிறுவன் சிசேரியன் செய்த விவகாரத்தில் அவனது பெற்றோர்களான மணப்பாறை டாக்டர் தம்பதிகள் முருகேசன், காந்திமதி கைது செய்யப்பட்டனர்.

ஜூன் 27 - இங்கிலாந்து பிரதமர் பதவியிலிருந்து டோனி பிளேர் ராஜினாமா செய்தார். புதிய பிரதமராக கார்டன் பிரவுன் பதவியேற்றார்.

ஜூன் 28 - ரூ. 2500 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தில் டைட்டானியம் டை ஆக்சைடு தொழிற்சாலையை நிறுவ தமிழக அரசுக்கும், டாடா நிறுவனத்திற்கும் இடையே முதல்வர் கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஜூன் 29 - மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் உறுப்பினர் ராஜேந்திரன் அபார வெற்றி.

- சிவகங்கை நகராட்சித் தலைவர் முருகன் கார் குண்டுக்குப் பலியானார்.

ஜூன் 30 - டெல்லி முன்னாள் பாஜக முதல்வர் சாஹிப் சிங் வர்மா சாலை விபத்தில் மரணம்.

ஜூலை:

ஜூலை 2 - அமெரிக்க அணு சக்தி போர்க் கப்பலான நிமிட்ஸ் சென்னை வந்தது.

ஜூலை 3 - சிவகங்கை நகராட்சித் தலைவர் முருகன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த திமுக கவுன்சிலர் மந்தக்காளை மற்றும் வெடிகுண்டு நிபுணர் பாலா ஆகியோர் குளித்தலை கோர்ட்டில் சரணடைந்தனர்.

- பெங்களூர் டாக்டர் முகம்மது ஹனீப், இங்கிலாந்து தீவிரவாதத் தாக்குதலில் தொடர்பு இருப்பதாக கூறி ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார்.

- இஸ்லாமாபாத்தில் உள்ள சிவப்பு மசூதியில் ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

ஜூலை 8 - முன்னாள் பிரதமர் சந்திரசேகர் புற்று நோயால் மரணமடைந்தார்.

- புதிய உலக அதிசயங்கள் பட்டியலில் தாஜ்மஹாலுக்கு முதலிடம் கிடைத்தது.

ஜூலை 10 - திருப்பூரில் பிரபல நக்சலைட் தலைவன் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட 3 நக்சலைட்டுகள் கைது.

ஜூலை 11 - தமிழகத்தில் நடப்பதாக இருந்த கூட்டுறவுத் தேர்தல்கள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் கருணாநிதி அதிரடி உத்தரவு.

ஜூலை 15 - சத்துணவுடன் வாரம் 3 முட்டைகள் வழங்கும் திட்டத்ைத முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

ஜூைல 16 - வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கைது செய்யப்பட்டார்.

ஜூலை 18 - மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் துரானி, ஷேக், அப்துல் கனி துர்க் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

- பிரேசிலன் சாவாபாலோ நகரில் பெட்ரோல் நிலையம் மீது விமானம் இறங்கியதில் 200 பேர் கருகி பலி.

ஜூலை 19 - குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்தது. தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்த அதிமுகவும், மதிமுகவும் திடீரென தேர்தலில் கலந்து கொண்டு வாக்களித்ததால் 3வது அணி கலைந்தது.

ஜூலை 20 - பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் செளத்ரியை டிஸ்மிஸ் செய்தது செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஜூலை 21 - குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதீபா பாட்டீல் அமோக வெற்றி பெற்றார்.

- ஹாரி பாட்டர் புத்தக வரிசையில் கடைசி நூல் வெளியானது.

ஜூலை 24 - போலி பாஸ்போர்ட் வழக்கில் நடிகை மோனிகா பேடிக்கு ஜாமீன் கிடைத்தது.

ஜூலை 26 - ராஜ்யசபா எம்.பிக்களாக டி.ராஜா, கனிமொழி, திருச்சி சிவா பதவியேற்றனர்.

- கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டலின் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 5 மாடிகளை இடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜூலை 27 - மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் டைகர் மேமனின் தம்பிக்கு தூக்குத் தண்டனையும், மைத்துனி மற்றும் மேலும் 2 தம்பிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

ஜூலை 30 - டைட்டானியம் தொழிற்சாலைத் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

ஆகஸ்ட்:

ஆக. 1 - கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி விடுதலை செய்யப்பட்டார்.

- பிரபல ரவுடி வெள்ளை ரவி என்கவுண்டரில் சுட்டுக் கொலை.

ஆக. 4 - டைட்டானியம் டை ஆக்சைடு தொழிற்சாலை குறித்த உண்மை நிலையை அறிய அமைச்சர் பொன்முடி தலைமையில் அரசுக் குழு அமைப்பு.

ஆக. 9 - ஹைதராபாத்தில் புத்தக விழாவில் கலந்து கொண்ட எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினை முஸ்லீம் கட்சி எம்.எல்.ஏக்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆக. 10 - துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஹமீத் அன்சாரி வெற்றி.

ஆக. 11 - அஸ்ஸாமில் பீகாரிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் பலி.

ஆக. 22 - உதவியாளர் கொலை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிபு சோரன் விடுதலை.

ஆக. 23 - மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் 6 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு சிறை சென்ற நடிகர் சஞ்சய் தத் ஜாமீனில் விடுதலையானார்.

ஆக. 24 - வேலூர் அருகே ரூ. 300 கோடியில் கட்டப்பட்ட ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணன் தங்கக் கோவில் திறந்து வைக்கப்பட்டது.

ஆக. 25 - சேலத்தில் உடனடியாக ரயில் கோட்டம் அமைக்கக் கோரி ரயில் மறியல் போராட்டம் நடந்தது.

- ஹைதராபாத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 35 பேர் பலியானார்கள்.

- மான் வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு தண்டனை உறுதி செயய்ப்பட்டது. அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆக. 28 - அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து தினகரன் நீக்கப்பட்டார். புதிய பொருளாளர் ஆனார் ஓ.பன்னீர் செல்வம்.

ஆக. 31 - சென்னையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நடிகர் சரத்குமார் தொடங்கினார்.

செப்டம்பர்:

செப். 1 - மூணாறு தேனிலவுக் கொலை வழக்கில் சென்னை பெண் வித்யா, அவரது கள்ளக்காதலர் ஆனந்த் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

செப். 10 - 9 ஆண்டு நாடு கடத்தலுக்குப் பின்னர் நாடு திரும்பிய முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மீண்டும் சவூதி அரேபியாவுக்கே நாடு கடத்தப்பட்டார்.

செப். 11 - தெலுங்கு தேச மகளிர் அணித் தலைவியாக நடிகை ரோஜா நியமிக்கப்பட்டார்.

செப். 12 - ராமர் இருந்தார் என்பதற்கு ஆதாரம் இல்ைல என்ற சர்ச்சைக்குரிய அபிடவிட்டை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் 14ம் தேதியன்று அதை வாபஸ் பெற்றது.

செப். 14 - புதுக்கோட்டையில் தேமுதிக 3வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

செப். 17 - நூற்றுக்கணக்கான பெண்களிடம் மாப்பிள்ளை வேடம் போட்டு ஏமாற்றிய லியாகத் அலி கைது செய்யப்பட்டார்.

செப். 18 - ராமர் குறித்த முதல்வர் கருணாநிதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் உள்ள கருணாநிதியின் மகள் செல்வி வீட்டில் இந்து மத அமைப்பினர் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கினர்.

செப். 20 - முஷாரப்புக்கு எதிராக புனிதப் போர் தொடங்குமாறு பாகிஸ்தான் முஸ்லீம்களுக்கு பின் லேடன் அழைப்பு விடுத்தார்.

செப். 23 - முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்துப் பேசிய வி.எச்.பி. சாமியார் வேதாந்தியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம். சென்னையில் பாஜக அலுவலகம் தாக்கப்பட்டது.

செப். 25- காங்கிரஸ் பொதுச் செயலாளராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டார்

- முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான ஜனா. கிருஷ்ணமூர்த்தி காலமானார்.

செப். 27 - சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மர்மக் காய்ச்சல் பரவியது. மாணவி கரீமா என்பவர் இதற்குப் பலியானார்.

செப் 30 - சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி தமிழகத்தில் திமுக கூட்டணி அறிவித்த பந்த்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

அக்டோபர்:

அக். 1 - சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் மாபெரும் உண்ணாவிரதம். தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு.

அக். 2 - பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதியாக கியானி நியமனம்.

அக். 6 - முன்னாள் எம்.எல்.ஏ எம்.கே.பாலன் கொலை வழக்கில் 14 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

அக். 7 - கர்நாடகத்தில் குமாரசாமி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்தது.

அக். 8 - குமாரசாமி சாமி அரசு ராஜினாமா செய்தது. கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

அக். 9 - இந்தியாவிலேயே சிறந்த மாநகராட்சியாக சென்னை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டது.

அக். 10 - அணு சக்தி ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு காலக்கெடுவை இந்தியா நிர்ணயிக்க வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்தது.

அக். 11 - ரம்ஜான் நோண்பு திறப்பின்போது ஆஜ்மீர் தர்கா வளாகத்தில் குண்டுவெடித்து 3 பேர் பலியானார்கள்.

அக். 12 - அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல் கோர் மற்றும் இந்தியரான ஆர்.கே.பச்சோரியைத் தலைவராகக் கொண்ட சர்வதேச அமைப்புக்கும் அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது.

- இன்சமாம் உல் ஹக் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

அக். 13 - விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே அறிவித்தார்.

அக். 15 - நியூஸ்வீக் இதழ் வெளியிட்ட தலைசிறந்த 8 பெண்மணிகள் பட்டியலில் இந்திரா காந்தி, மாயாவதி ஆகியோர் இடம்பெற்றனர்.

- ஹைதராபாத்தில் அமைக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை மையத்தை மத்திய அறிவியல்துறை அமைச்சர் கபில் சிபல் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

அக். 16 - தமிழக பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் செல்போன்களைப் பயன்படுத்த அரசு தடை விதித்தது.

அக். 17 - நடிகர் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா, வீட்டை விட்டு வெளியேறி தனது காதலர் சிரீஷ் பரத்வாஜை ரகசியத் திருமணம் செய்து கொண்டார்.

அக். 18 - 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கராச்சி திரும்பினார் பெனாசிர் பூட்டோ. அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு ஊர்வலத்தின்போது குண்டுவெடித்து 165 பேர் உயிரிழந்தனர்.

- தமிழக சபாநாயகர் ஆவுடையப்பன் மீது அதிமுக எம்.எல்.ஏ. போஸ் அவைக் காவலரின் தொப்பியை எடுத்து வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

- பள்ளிகளில் செல்போன்களைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

அக். 22 - அனுராதபுரம் விமானப்படைத் தளத்தில் விடுதலைப் புலிகளின் விமானப் படை தாக்குதல் நடத்தியது. பல விமானங்கள் சேதமடைந்தன. 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

- கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

- லண்டனில் நடந்த விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு 2ம் சார்லஸ் பதக்கம் அளிக்கப்பட்டது.

- நடிகர் சஞ்சய் தத்துக்கு தீர்ப்பின் நகல் வழங்கப்பட்டதால் மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அக். 23 - சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வசம் இருந்த சுகாதாரத் துறை பறிக்கப்பட்டது.

அக். 24 - கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாஷா உள்ளிட்ட 31 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 4 பேருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

- விடுதலைப் புலிகள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறி தேர்தலில் போட்டியிடும் வகையில், அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

அக். 25 - தேசிய அளவில் புதிதாக ஒரு அணியை அமைக்கப் போவதாக இடதுசாரிக் கட்சிகள் அறிவித்தனர்.

- அனைத்து மதத் திருமணங்களையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது.

- கோத்ரா வன்முறையை நரேந்திர மோடிதான் தூண்டி விட்டார் என்று தெஹல்கா இதழ் பரபரப்புத் தகவல்களை வெளியிட்டது.

அக். 27 - பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி அறிவித்தார். பாஜக தலைவர் எடியூரப்பா ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

- ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய சரமாரித் துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியின் மகன் அனூப் மராண்டி உள்ளிட்ட 18 பேர் கொல்லப்பட்டனர்.

அக். 28 - ரத்த பூமியாக மாறிப் போன நந்திகிராமுக்குச் செல்ல முயன்ற திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக மம்தா உயிர் தப்பினார்.

- ஈராக்கில் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். அமெரிக்கா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி அமெரிக்காவின் 15 நகரங்களில் பிரமாண்ட பேரணிகள் நடத்தப்பட்டன.

அக். 29 - முதுகுளத்தூர் அருகே காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மீது வேல் கம்பு தாக்குதல் நடத்தப்பட்டது.

- ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மன நல காப்பகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 28 மன நோயாளிகள் கருகி பலியான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மன நல காப்பக உரிமையாளர் பாதுஷாவுக்கு 196 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு.

அக். 30 - நைஜீரியத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட நெல்லை மாவட்டத்தைச் ேசர்ந்த வினோத், மோகன்தாஸ், அஜீத் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

அக். 31 - முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே புதிய அணை கட்டுவதை தமிழகம் அனுமதிக்காது என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

நவம்பர்:

நவ. 1 - சேலம் ரயில் கோட்டம் உதயமானது. முதல்வர் கருணாநிதி புதிய கோட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

நவ. 2 - இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 6 முக்கிய புலிகள் இயக்க நிர்வாகிகள் கொல்லப்பட்டனர்.

நவ. 3 - பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டை ராணுவம் கைப்பற்றியது. நீதிபதிகள், வக்கீல்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

- ஹைதிக்கு அமைதிப் பணிக்காக சென்ற இலங்கை வீரர்கள் பலர் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி திருப்பி அனுப்பப்பட்டனர்.

நவ. 4 - இம்ரான்கான் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

- தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டாலும் விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து தடையின்றி செயல்படும். தமிழீழத்தை அடைய போராட்டம் தீவரமாக்கப்படும் என்று பிரபாகரன் அறிவித்தார்.

நவ. 5- தமிழக அரசின் புதிய தொழில் கொள்கையை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்.

நவ. 6 - குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் முன்பு பாஜக, மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏக்கள் 125 பேரும் அணிவகுத்து தங்களது கூட்டணியின் பெரும்பான்மையை சுட்டிக் காட்டி, ஆட்சி அமைக்க பாஜகவுக்கு அழைப்பு விட ஆளுநருக்கு உத்தரவிடக் கோரினர்.

- 4 கால்கள், 4 கைகள், 2 முதுகுத் தண்டுவடத்துடன் பிறந்த அதிசயப் பெண் லட்சுமிக்கு பெங்களூர் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மூலம் தேவையற்ற கை, கால்கள் அகற்றப்பட்டன.

- திருட்டு விசிடி தயாரித்ததாக கூறி பிரபல விநியோகஸ்தர் நாக் ரவி தாக்கப்பட்டார்.

நவ. 7 - மீண்டும் அரியலூர் மாவட்டத்தை உருவாக்க தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

நவ. 9 - பாஜக ஆட்சி அமைக்க கர்நாடக ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

- துபாயில் பாலம் இடிந்து விழுந்ததில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 7 இந்தியர்கள் பலியானார்கள்.

- இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அனில் கும்ப்ளே தேர்வு செய்யப்பட்டார்.

- விருந்தில் ஓபியத்ைத நுகர்ந்ததாக முன்னாள் பாஜக அமைச்சர் ஜஸ்வந்த் சிங் சர்ச்சையில் சிக்கினார்.

நவ. 11 - சென்னை சத்தியமூர்த்தி பவனுக்குள் புகுந்த கும்பல் சரமாரியாக வெட்டியதில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் காயமடைந்தார். இதில் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் மகனும், எம்.எல்.ஏவுமான விஷ்ணுபிரசாத் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

- தென்னகத்திலேயே முதல் முறையாக கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது.

- காதலரை ரகசியத் திருமணம் செய்து கொண்டு டெல்லிக்குப் போன நடிக்ர சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா கணவருடன் ஹைதராபாத் திரும்பினார்.

- தமிழ்ச்செல்வன் இரங்கல் பேரணியில் கலந்து கொண்ட பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

நவ. 12 - அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வீட்டுக்குள் நுழைய முயன்ற ஜோஷ்வா கார்த்திக் என்பவரை போலீஸார் கைது செய்தனர். 2வது முறையாக ஜெயலலிதா வீட்டுக்குள் அவர் நுழைய முயன்றார்.

நவ. 13 - அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணு சக்திக் கழகத்துடன் பேச மத்திய அரசுக்கு இடதுசாரிகள் அனுமதி அளித்தனர்.

- காங்கிரஸ் கோஷ்டி மோதல் குறித்து விசாரிக்க குமரி அனந்தன் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

நவ. 14 - முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே புதிய அணை கட்டப்படும் என கேரள சட்டசபையில் அம்மாநில முதல்வர் அச்சுதானந்தன் அறிவித்தார்.

- தோட்டா படப்பிடிப்பின்போது நடிகர் சந்திரசேகர் வயிற்றில் கத்தி பாய்ந்து காயமடைந்தார்.

நவ. 15 - வங்கதேசத்ைத புயல் தாக்கியது. 1200 பேர் பலியானார்கள்.

- முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இயந்திரம் மகேந்திரகிரியில் வெற்றிகரமாக இயக்கப் பரிசோதிக்கப்பட்டது.

நவ. 17 - ஈரோடு, திருப்பூர் நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி அவசரச் சட்டங்களை தமிழக அரசு பிறப்பித்தது.

- திருவாரூரில் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைச்செல்வன் படுகொலை செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு அருகே அதிமுக நகர செயலாளர் குமார் என்கிற குரங்கு குமார் படுகொலை செய்யப்பட்டார்.

- ரயில் நிலையங்கள், ரயில்களில் தண்ணீர் பாக்கெட்டுகளை விற்க தடை விதிக்கப்பட்டது.

நவ. 18 - அமெரிக்காவில் கணவர் குடும்பத்தாரால் ஓடும் காரிலிருந்து தள்ளி விடப்பட்டு படுகாயமடைந்து, கோமா நிலைக்குத் தள்ளப்பட்ட திருச்சி பெண் ஜெனிதா சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார்.

நவ. 19 - மதச்சார்பற்ற ஜனதாதளம் தனது ஆதரவை திருமம்பப் பெற்றதால், பதவி ஏற்ற 7வது நாளிலேயே கர்நாடகத்தில் எதியூரப்பா தலைமையிலான பாஜக அரசு கவிழ்ந்தது.

- ஒளிப்பதிவாளர் வைத்தி தன்னை கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி விட்டு, உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்தார் நடிகை காவேரி.

நவ. 20 - டாக்டர் குமாரதாஸ், அதிமுகவை விட்டு நீக்கப்பட்டதாக ஜெயலலிதா அறிவித்தார்.

- ஆந்திர மாநில சட்டசபை வளாகத்தில் விடிய விடிய படுத்துத் தூங்கிப் போராட்டம் நடத்தினார் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு.

நவ. 21 - கொல்கத்தாவில் நடந்த முழு அடைப்பின்போது பெரும் வன்முறை மூண்டது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ராணுவம் வரவழைக்கப்பட்டது.

நவ. 22 - தமிழகத்தில் கூலிப்படையினரின் அட்டாகசத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.

- முஷாரப் 2வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

- கொல்கத்தாவில் ஏற்பட்ட பெரும் கலவரத்தைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறினார் தஸ்லிமா நஸ்ரின்.

நவ. 23 - லக்னோ, வாரணாசி, பைசஸாபாத் ஆகிய நகரங்களில் நீதிமன்ற வளாகங்களில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 3 பேர் பலியானார்கள்.

- தமிழகத்தின் 31வது மாவட்டமாக அரியலூர் உதயமானது.

- தமிழக அட்வகேட் ஜெனரல் விடுதலை நீக்கப்பட்டு புதிய அட்வகேட் ஜெனரலாக மாசிலாமணி நியமிக்கப்பட்டார்.

- தமிழகத்தில் மருத்துவ மாணவர் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

நவ. 25 - மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூடி பேரணி நடத்தினர். இதைக் கலைக்க போலீஸார் துப்பாக்கிச் சூடும், கண்ணீர்ப் புகை குண்டுகளையும் வீசியதால் அமைதியான பேரணி வன்முறையில் முடிந்தது.

- ஆஸ்திரேலிய தேர்தலில் பிரதமர் ஜான் ஹோவர்ட் படுதோல்வியைச் சந்தித்தார். கெவின் ரூத் புதிய பிரதமரானார்.

- 2வது முறையாக மீண்டும் பாகிஸ்தான் திரும்பினார் நவாஸ் ஷெரீப். இம்முறை நாடு கடத்தப்படாமல் அனுமதிக்கப்பட்டார்.

- ரூ. 7 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த உப்பள அதிபர் ராமமூர்த்தியின் மகன் 7 வயது மகன் மணிகண்டன் கொடூரமாக கொல்லப்பட்டான்.

- நடிகர் விஜய் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.

- பாமக துணைத் தலைவர் சி.ஆர்.பாஸ்கரன், தேமுதிகவில் இணைந்தார்.

நவ. 26 - இனிமேல் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என நடிகர் விஜய் அறிவித்தார்.

நவ. 27 - மலேசிய தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தமிழர்களின் நலனைக் காக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதினார்.

- தமிழர்கள் போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் பாயும் என மலேசிய பிரதமர் படாவி எச்சரிக்கை விடுத்தார்.

- தமிழீழ விடுதலைக்காக உலகத் தமிழர்கள் கிளர்ந்தெழ வேண்டும் என பிரபாகரன் வேண்டுகோள் விடுத்தார்.

- வங்கதேச எழுத்தாளர் தஸ்ரிமா நஸ்ரின் டெல்லியில் ரகசிய இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டார்.

- நெலுக்கு குவிண்டாலுக்கு ரூ. 1000 குறைந்தபட்ச ஆதரவு விலை தரக் கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

- நடிகர் சஞ்சய் தத்துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

- நாட்டின் முதல் பெண் ஐபி.எஸ் அதிகாரி கிரண் பேடி விருப்ப ஓய்வு பெற விண்ணப்பம் செய்தார்.

நவ. 28 - கொழும்பில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உயிர் தப்பினார்.

- பாகிஸ்தான் ராணுவத் தளபதி பதவியிலிருந்து பர்வேஸ் முஷாரப் விலகினார்.

- முப்பெரும் தேவியர் சிலைகளுக்கு அருகே செருப்புக் காலுடன் அமர்ந்து கடவுள்களை அவமதித்து விட்டதாக கூறி நடிகை குஷ்பு மீது கும்பகோணம் நீதிமன்றத்தில் இந்து முன்னணி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

- ராணுவத் தலைமைத் தளபதி பதவியிலிருந்து விலகினார் முஷாரப்.

நவ. 29 - பாகிஸ்தான் அதிபராக மீண்டும் முஷாரப் பதவியேற்றார்.

நவ. 30 - டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் இயக்குநர் பதவியிலிருந்து டாக்டர் வேணுகோபால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

டிசம்பர்:

டிச. 1 - காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உடனடியாக வகுப்புகளுக்குத் திரும்ப வேண்டும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தது.

- மலேசிய விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி தலையிடக் கூடாது என்று மலேசிய அமைச்சர் எச்சரிக்கும் தொணியில் பேசினார்.

டிச. 2 - சென்னையில் 95 அடி உயரத்தில் பெரியாருக்கு சிலை வைக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

- கொழும்பு நகரில் ஆயிரக்கணககான தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.

- நடுவானில் ஏவுகணையை இடைமறித்துத் தாக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது.

டிச. 3 - பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை ஆந்திர அரசு திடீரென ரத்து செய்தது.

டிச. 4 - நடிகர் மனோஜின் மனைவி நடிகை நந்தனாவுக்கு கேரள மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

- ஹைதராபாத்தில் ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருந்த டாக்டரை நடிகை விஜயசாந்தி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

- தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்களது போராட்டத்ைதத் திரும்பப் பெறுவதாக அறிவித்தனர்.

- முஷாரப்புக்கு எதிராக செயல்படுவது குறித்து முன்னாள் பிரதமர்கள் பெனாசிர் பூட்டோவும், நவாஸ் ஷெரீப்பும் சந்தித்துப் பேசினர்.

டிச. 5 - சென்னையில் மர்ம வாயு பரவி மக்களிடையே பீதி ஏற்பட்டது.

- சொராபுதீன் ஷேக்கை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றது தவறில்ைல என்று நரேந்திர மோடி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

டிச. 6 - தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகியோருக்கு தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

- ஜெயா டிவியின் ஜெயா பிளஸ் மற்றும் ஜெயா மேக்ஸ் ஆகிய இரு புதிய தொலைக்காட்சி சானல்களின் ஒளிபரப்பை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

- சொராபுதீன் ஷேக் படுகொலையை நியாயப்படுத்திப் பேசியதற்காக நரேந்திர மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

டிச. 7 - பிரபாகரனை சுட்டுக் கொல்லுமாறு முன்னாள் இந்தியத் தூதர் ஜே.என்.தீக்சித், உத்தரவிட்டதாக முன்னாள் அமைதி காக்கும் படை தளபதி பரபரப்புத் தகவலை வெளியிட்டார்.

டிச. 9 - நரேந்திர மோடியை மரண வியாபாரி என அழைத்துப் பேசியது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

- தங்கர்பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு படம் தமிழகம் முழுவதும் இலவசமாக திரையிடப்பட்டது.

டிச. 10 - அடுத்த பிரதமர் வேட்பாளராக அத்வானியை பாஜக தேர்ந்தெடுத்தது.

டிச. 11 - சென்னை விமான நிலையத்தில் 2 விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டனர்.

- பாஜகவின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அத்வானி அறிவிக்கப்பட்டார்.

- குஜராத் சட்டசபைக்கு முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது.

டிச. 12 - சொராபுதின் ஷேக் போலி என்கவுண்டர் தொடர்பான வழக்கில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

- ஆலடி அருணா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கல்வி நிறுவன அதிபர் எஸ்.ஏ.ராஜா கார் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.

- விளைநிலங்களில் டாக்டர் ராமதாஸ் கல்லூரிகள் கட்டி வருவதாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆதாரங்களை வெளியிட்டு அறிக்கை விட்டார்.

டிச. 13 - புதுச்சேரியில் இயக்குநர் தங்கர்பச்சான் திருட்டு விசிடி வேட்டையில் இறங்கி ஒன்பது ரூபாய் நோட்டு படத்தின் திருட்டு விசிடிக்களைப் பறிமுதல் செய்தார்.

- கவிஞர் சினேகன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

- மலேசியாவில் இந்து உரிமைகளுக்கான நடவடிக்ைகக் குழுவின் சட்ட ஆலோசகர் உதயக்குமார் உள்ளிட்ட 5 நிர்வாகிகள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்பு.

டிச. 15 - அமெரிக்காவின் லூசியானா பல்கலைக்கழக வளாகத்தில் ஆந்திராவைச் ேசர்ந்த சந்திரசேகர ரெட்டி, கிரண்குமார் கொம்மா ஆகிய இரு ஆராய்ச்சி மாணவர்கள் அடையாளம் தெரியாத 3 பேரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

- கைது செய்யப்பட்ட மலேசிய தமிழர்களை விடுவிப்பது தொடர்பாக மலேசிய பிரதமர் படாவியுடன் 13 தமிழர் அமைப்புகள் பேச்சுவார்த்தை நடத்தின.

- திருநெல்ேவலியில் திமுக இளைஞர் அணியின் முதலாவது மாநில மாநாடு தொடங்கியது. மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணியும் நடைபெற்றது.

டிச. 16 - 31 தமிழர்கள் மீதான வழக்குகளைக் கைவிட அரசு தலைமை வழக்கறிஞருக்கு மலேசிய பிரதமர் படாவி உத்தரவிட்டார்.

- சட்டீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா சிறைச்சாலையிலிருந்து 300 கைதிகள் துணிகரமாக தப்பி நாட்டையே பரபரப்பில் ஆழ்த்தினர்.

- மு.க.ஸ்டாலின் குறித்த திமுகவினரின் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறும் என்று நெல்லை திமுக இளைஞர் அணி மாநாட்டில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

- இலங்கை விமானப்படை தாக்குதலில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் காயமடைந்ததாக இலங்கை பத்திரிக்ைககள் செய்தி வெளியிட்டன.

- குஜராத் சட்டசபைக்கு 2வது கட்ட வாக்குப் பதிவு அமைதியாக நடந்தது.

- கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் லீக்கின் முதல் சாம்பியன் பட்டத்ைத சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி வென்று ரூ. 4 கோடி பரிசுத் தொகையை தட்டிச் சென்றது.

டிச. 17 - மலேசியத் தமிழர்கள் 31 பேர் மீதான கொலை முயற்சி வழக்கு கைவிடப்பட்டது. அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

டிச. 18 - பிரமோத் மகாஜன் கொலை வழக்கில் அவரது தம்பி பிரவீன் மகாஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

- கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டிச. 19 - தேனி மாவட்டம் வருசநாட்டு மலைப் பகுதியில், 5 நக்சலைட்டுகள் கடும் துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

- சென்னையில் தாறுமாறாக காரை ஓட்டி 3 பேர் உயிரிழக்கக் காரணமாக கருதப்படும் சிறுவன் அச்சல் கெம்கா சிறார் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீனில் விடுதலை ஆனார்.

- முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக டெல்லியில் முதல்வர் கருணாநிதி, கேரள முதல்வர் அச்சுதானந்தன் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

- சென்னை வேளச்சேரியில் ஆசிரமம் நடத்தி வரும் சாமியார் பழனிச்சாமியால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட திவ்யா என்ற ஹோமியோபதி டாக்டர், சாமியாரையே மணந்து கொண்டதாக போலீஸில் ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

டிச. 20 - தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்ட 3 அதிமுகவினருக்கும் ஜனவரி 10ம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என சேலம் நீதிமன்றம் அறிவித்தது.

- கோவை மேற்கு தொகுதியில், அதிமுக வேட்பாளர் மலரவன் வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

- ஈரோடு, திருப்பூர் நகராட்சித் தலைவர்கள் மேயர்களாக செயல்பட தடை இல்ைல என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

- வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், டெல்லியை விட்டு வெளியேறக் கூடாது. அப்படி போக விரும்பினால் நாட்டை விட்டே வெளியேற வேண்டும் என மத்திய அரசு, தஸ்லிமாவுக்குக் கண்டிப்பாக கூறியது.

- அமெரிக்க துணை அதிபர் டிக் செனியின் அலுவலகத்தில் ெபரும் தீவிபத்து ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

டிச. 21 - பெங்களூர் டாக்டர் முகம்மது ஹனீப் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து பணியாற்றலாம், அவரது விசாவை ரத்து செய்தது செல்லாது என்று ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

- அமிதாப்பச்சனின் தாயார் தேஜி பச்சன் மும்பை லீலாவதி மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

- இளவரசர் சார்லஸ் தனது காரில் பழுது ஏற்படுத்தி கொலை செய்ய முயற்சிப்பதாக இளவசரி டயானா எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

டிச. 22 - விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் நல்ல உடல் நலனுடன் இருப்பதாக விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் தெளிவுபடுத்தியது.

டிச. 23 - குஜராத் சட்டசபைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று 4வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.

- முன்னாள் அதிமுக அமைச்சரும், தேமுதிக தேர்தல் பிரிவு செயலாளருமான பொன்னுச்சாமி திமுகவில் இணைந்தார்.

- சென்னை வேளச்சேரியில் ஆசிரமம் நடத்தி வந்த பழனிச்சாமி என்ற சாமியார் தனது டாக்டர் மகள் திவ்யாவை கடத்திச் சென்று விட்டதாக அவரது தந்தை போஜராஜ் போலீஸில் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

டிச. 24 - மதுரையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அதிமுக மற்றும் தேமுதிகவினர் கடுமையாக மோதிக் கொண்டனர்.

- மலேசியாவில் இந்துக் கோவில்களை பாதுகாப்பது தொடர்பாக அமைச்சர் டத்தோ சாமிவேலு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

- ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கடற்கரை மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த அதி நவீன துப்பாக்கிகளை போலீஸார் கைப்பற்றினர்.

டிச. 25 - குஜராத் மாநில முதல்வராக 3வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றார்.

- ஒரிசாவில் வி.எச்.பி. பிரமுகர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பெரும் கலவரம் வெடித்தது. பல சர்ச்சுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. கிறிஸ்தவர்களின் வீடுகளும் தாக்கப்பட்டன.

- மிருகம் படத்தில் இடம் பெற்ற ஜல்லிக்கட்டு காட்சியை நீக்கியதைக் கண்டித்து அப்படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் ஜெய், இயக்குநர் சாமி, நாயகன் ஆதி உள்ளிட்ட மிருகம் படக் குழுவினர் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தனர்.

- ஷோலே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்த பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஜி.பி. சிப்பி மும்பையில் மரணமடைந்தார்.

டிச. 26 - டெல்லி அக்ஷ்ர்தாம் சுவாமி நாராயணன் கோவில், உலகிலேயே மிகப் பெரிய இந்துக் கோவில் என்ற பெருமையுடன் கின்னஸ் சாதைப் புத்தகத்தில் இடம் பெற்றது.

- இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடியின் ராஜினாமாவை மத்திய அரசு ஏற்றது.

- எழுத்தாளர் நீல. பத்மநாபனுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.

டிச. 27 - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, ராவல்பிண்டியில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் கொடூரமாக கொல்லப்பட்டார்.

- இலங்கை தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் மெர்வின் சில்வாவை, ரூபவாஹினி தொலைக்காட்சி நிலைய நிலையர்கள் சரமாரியாக தாக்கி பரபரப்பை ஏற்படுத்தினர்.

- டெல்லியில் நடந்த ஓவியர் எம்.எப். ஹுசேனின் கண்காட்சியில் புகுந்த சிவசேனை தொண்டர்கள் அவரது ஓவியங்களை சூறையாடினர்.

டிச. 28 - இமாச்சலப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, காங்கிரஸிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது.

- பெனாசிர் பூட்டோவின் உடல் அவரது சொந்த ஊரான லர்ஹானாவில் அடக்கம் செய்யப்பட்டது.

டிச. 29 - ஈரோடு, திருப்பூர் மாநகராட்சிகளை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

டிச. 30 - பாகிஸ்தான் மக்கள் கட்சியின் புதிய தலைவராக பெனாசிரின் மகன் பிலாவல் பூட்டோ அறிவிக்கப்பட்டார்.

- இமாச்சலப் பிரதேச மாநில முதல்வராக பாஜகவின் பி.கே.தூமால் பதவியேற்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X