For Daily Alerts
Just In
செல்போனை ஒட்டு கேட்கிறார்கள்-புதுவை அதிமுக எம்.எல்.ஏ புகார்
புதுச்சேரி: தனது செல்போன் ஒட்டுக் கேட்கப்படுவதாக அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் இன்று புதுச்சேரி சட்டசபையில் புகார் கூறினார்.
புதுச்சேரி சட்டசபையில் இதுதொடர்பாக இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்து அவர் பேசுகையில், சமீபத்தில் நான் எனது செல்போனில் பேசியபோது சம்பந்தம் இல்லாத சில புதிய சத்தங்கள் கேட்டன. இது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதால் ஏற்படும் சத்தமாக இருக்கலாம் என எனது நண்பர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து விசாரிக்க உத்தரவிடப்பட வேண்டும் என்று கோரினார். ஆனால் அரசுத் தரப்பில் இதற்குப் பதில் ஏதும் தரப்படவில்லை.