ஒட்டுக்கேட்பு: நீதிபதி சண்முகம் விசாரணை தொடங்கியது
சென்னை: தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து நீதிபதி சண்முகம் தலைமையிலான கமிஷன் இன்று விசாரணையை தொடங்கியது.
கடந்த மார்ச் மாதம் தமிழக உள்துறை செயலாளர் திரிபாதியும், ஊழல் தடுப்புப்பிரிவு கூடுதல் டிஜிபி உபாத்யாயாவும் பேசிய தொலைபேசி உரையாடல் ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் நீதிபதி சண்முகம் கமிஷன் விசாரணை இன்று நடந்தது. அப்போது முதலில் உள்துறை செயலாளர் திரிபாதியும், அடுத்ததாக ஏடிஜிபி உபாத்யாயாவும் நேரில் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணக்குழு கேட்ட கேள்விகளுக்கு பதில் இருவரும் அளித்தனர்.
இந்நிலையில், உபாத்யாயாவிடம் தனது உறவினருக்கு அமைச்சர் பூங்கோதை சிபாரிசு செய்த தொலைபேசி உரையாடல் அடங்கிய சிடியை ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம் சுவாமி வெளியிட்டார். இதனால் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக முதல்வர் கருணாநிதியிடம் பூங்கோதை கடிதம் அளித்துள்ளதை அடுத்து தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.