For Daily Alerts
Just In
ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

உலகமெங்கும் நிலவும் பெரும் பொருளாதார மந்தம் மற்றும் இந்தியாவிலிருந்து வெளிநாட்டு முத்தலீட்டாளர்கள் வெளியேறி வருவதுதான் இந்த கடும் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நிதியமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.
இதற்கு முன் 2002-ம் ஆண்டு மே மாதம் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 49.07 ஆக இருந்தது. அதன் பிறகு நிலைமை சீரானதால் 40 ரூபாய் வரை குறைந்தது.
இப்போது இந்திய பங்குச் சந்தையின் கடும் வீழ்ச்சி, அமெரிக்கப் பொருளாதாரம் தடுக்க முடியாத சரிவில் சிக்கிக் கொண்டிருப்பது மற்றும் அமெரிக்கா தனது இறக்குமதியைக் குறைத்துக் கொண்டுள்ளது போன்ற காரணங்களால் இந்த மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.