For Daily Alerts
Just In
ஆப்கான் அதிபர் தேர்தல்- பெரும்பான்மையுடன் கர்சாய் வெற்றி

இது குறித்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் கூறுகையில்,
நேற்று இறுதி கட்ட வாக்குப்பதிவு எண்ணப்பட்டது, அதில் கர்சாய் 54.6 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் அப்துல்லா அப்துல்லாவுக்கு 27.8 சதவீத வாக்கு விழுந்துள்ளது.
தேர்தல் நாளன்று சுமார் 38 சதவீத மக்கள் வாக்களித்தனர். அதாவது சுமார் 55 லட்சம் வாக்குகள் பதிவாகின.
வாக்குப்பதிவின் போது சுமார் 15 லட்சம் வாக்கு சீட்டுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சில வாக்குசீட்டுகளில் யாருக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது என்பதே தெரியவில்லை. இது மொத்த வாக்குகளில் 25 சதவீதத்துக்கும் அதிகம் என்றார்.