For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இடைத் தேர்தல்-களை கட்டியது திருச்செந்தூர்!

By Staff
Google Oneindia Tamil News

திருச்செந்தூர்: இடைத் தேர்தல் நடக்கும் திரு‌ச்​‌செ‌ந்​தூ‌ர் ‌தொகு​தி​யி‌ல் து‌ணை முத‌ல்​வ‌ர் மு.க.‌ஸ்ட‌ா​லி‌ன்,​​ அதி​முக ‌பொதுச் செயலாளர் ‌ஜெயல​லித‌ா,​​ ‌தேமு​திக த‌லை​வ‌ர் விஜ​ய​கா‌ந்‌த் ஆகி​‌யோர் ஒ‌ரே ந‌ாளி‌ல் பிர​ச்ச‌ா​ர‌ம் ‌செ‌ய்​ய​வு‌ள்​ள​ன‌ர்.​

இந்தத் தொகுதியில் தி​முக ‌தெ‌ன்​ம‌ண்​டல அ‌மை‌ப்​பு‌ச் ‌செயலாளரும் மத்திய அமைச்சருமான மு.க.அழ​கிரி முக‌ா​மி‌ட்டு ‌தே‌ர்​த‌ல் பணி​க‌ளை ஒருங்கிணைத்து வரும் நிலையில் மு.க.​ ‌ஸ்டா​லி‌ன் டிச‌ம்​ப‌ர் 13,​ 14‌ம்‌தேதி​க​ளி​ல் பிர​ச்சாரம் செய்ய வருகிறார்.

அழகிரி தலைமையில் அமைச்சர்கள் நேரு, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமசந்திரன், ஐ.பெரியசாமி, சுரேஷ்ராஜன், கீதா ஜீவன், பூங்கோதை, மைதீன்கான், தமிழரசி, பெரியகருப்பன் என பெரிய குழுவே தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதே போல அதி​முக ‌பொதுச் செயலாளர் ‌ஜெயல​லித‌ா 12,​ 13‌ம் ‌தேதி​க​ளி‌ல் பிர​ச்சா​ர‌ம் ‌செ‌ய்​கி​றா‌ர்.

அதிமுக தரப்பில், தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டைய தலைமையில், முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார், ராஜகண்ணப்பன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் தொகுதியில் முகாமிட்டுள்ளனர்.

‌தேமு​திக த‌லை​வ‌ர் விஜ​ய​க‌ா‌ந்‌த் 12,​ 13,​ 14‌ம் ‌தேதி​க​ளி​லு‌ம்,​​ அவ​ரது ம‌னைவி ​பி‌ரே​ம​லதா 15,​ 16ம் ‌தேதி​க​ளி​லு‌ம்பிர​ச்சாரம் ‌செ‌ய்​கி‌ன்​ற​ன‌ர்.​

தேமுதிகவும் தனது மாநில துணை செயலாளர் ஆஸ்டின் தலைமையில் 27 மாவட்ட செயலாளர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளது.

13‌ம் ‌தேதி ‌ஸ்ட‌ா​லி‌ன்,​​ ‌ஜெயல​லித‌ா,​​ விஜ​ய​கா‌ந்‌த் மூவரும் திரு‌ச்​‌செ‌ந்​தூ‌ர் தொகுதியில் பிரச்சாரம் செய்யவுள்ளதால் போலீசார் பதைபதைப்புடன் உள்ளனர்.

நாளை வைகோ பிரச்சாரம்:

இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் நாராயணனை ஆதரித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நாளையும் மறுநாளும் பிரச்சாரம் செய்கிறார்.

அதே போல அதிமுக வேட்பாளரை ஆதரித்து மா‌ர்‌க்​சி‌ஸ்‌ட் க‌ம்​யூ​னி‌ஸ்‌ட் மாநி​ல‌ச் ‌செய​ல‌ாளர் வர​த​ர‌ா​ஜ‌ன் 10ம் ‌தேதி பிரச்சாரம் செய்கிறார்.

16 அதி​மு​க​வி​ன‌ர் மீது வழ‌க்கு:

வ‌ந்​த​வ‌ாசியில் வே‌ட்​பு​மனு த‌ா‌க்க​லி‌ன்​‌போது,​​ ‌தே‌ர்​த‌ல்விதி​மு​‌றை​க‌ளை மீறி​ய​த‌ாக அதிமுக எம்பி த‌ம்​பி​து‌ரை,​​ மு‌ன்​ன‌ா‌ள் அ‌மை‌ச்​ச‌ர் சி.‌பொ‌ன்​‌னை​ய‌ன் உ‌ள்​ளி‌ட்ட 16 அதி​மு​க​வி​ன‌ர் மீது வழ‌க்​கு‌ப் பதிவு ‌செ‌ய்​ய‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது.​

அதி​முக ‌வே‌ட்​ப‌ா​ள‌ர் பி.முனு​ச‌ாமி நவ‌ம்​ப‌ர் 30‌ம் ‌தேதி‌வே‌ட்​பு​மனு த‌ா‌க்​க‌ல் ‌செ‌ய்​த‌ா‌ர்.​ அ‌ப்​‌போது அவ​ரு​ட‌ன்‌தொகுதி அதி​முக ‌தே‌ர்​த‌ல் பணி‌க்​கு​ழு‌த் த‌லை​வ​ர் த‌ம்​பி​து‌ரை,​​ பொ‌ன்​‌னை​ய‌ன் உ‌ள்​ளி‌ட்​‌டோ‌ர் உட​னி​ரு‌ந்​த​ன‌ர்.​

‌தே‌ர்​த‌ல் விதி​மு​‌றை​க​ளி‌ன்​படி ‌வே‌ட்​ப‌ா​ள‌ர் ‌வே‌ட்​பு​மனுத‌ா‌க்​க‌ல் ‌செ‌ய்​யு‌ம்​‌போ‌து,​​ அவ​ரு​ட‌ன் 4 ‌பே‌ர் ம‌ட்​டு‌மே இரு‌க்க ‌வே‌ண்​டு‌ம்.​ விதி​மு​‌றை​க‌ளை மீறி வ‌ட்​ட‌ா‌ட்​சி​ய‌ர்அலு​வ​ல​க‌த்​து‌க்​கு‌ள் 16 ‌பே‌ர் நு‌ழை‌ந்து மனு த‌ா‌க்​க‌ல்‌செ‌ய்​த​த‌ா​க​வு‌ம்,​​ அரசு அலு​வ​ல‌ர்​க‌ளை பணி​‌செ‌ய்ய விட‌ா​ம‌ல் தடு‌த்​த​த‌ா​க​வு‌ம் உத​வி‌த் ‌தே‌ர்​த‌ல் அலு​வ​ல​ரு‌ம்வ‌ட்​ட‌ா‌ட்​சி​ய​ரு​ம‌ான எ‌ம்.நீல​‌வேணி ‌போலீ​ஸி‌ல் புக‌ா‌ர்அளி‌த்​தா‌ர்.

இ​த‌ன்​‌பே​ரி‌ல் த‌ம்​பி​து‌ரை,​​ பொ‌ன்​‌னை​ய‌ன்,​​ பி.முனு​ச‌ாமிஉ‌ள்​ளி‌ட்ட 16 ‌அதிமுகவினர் மீது வழ‌க்​கு‌ப் பதிவு‌செ‌ய்​யப்பட்டுள்ளது.

எனக்கு ரூல் தெரியாதா?-தம்பிதுரை:

இது குறித்து நிருபர்களிடம் தம்பிதுரை கூறியதாவது: திமுகவினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால்தான் எங்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். எங்களின் பணியை முடக்கவே இந்த வழக்கு. தேர்தல் விதிமுறை நாங்கள் மீறவில்லை. ஒரே நேரத்தில் மாற்று வேட்பாளர், சுயேட்சை வேட்பாளர் என உள்ளே அனுமதித்தனர். அது அதிகாரிகள் குற்றமே தவிர எங்கள் மீது தவறு இல்லை. தேர்தல் விதிமுறை பற்றி மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்த எனக்கு நன்கு தெரியும். தேர்தல் விதிமுறை அதிமுகமீறியது இல்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X