For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு- இன்றைய நிகழ்ச்சிகள்

Google Oneindia Tamil News

Tamil Conference Logo
கோவை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் இன்று 2ம் நாளன்று பொதுக் கண்காட்சி திறக்கப்படுகிறது. மேலும் ஆய்வரங்குகள், கருத்தரங்குகளும் இன்று முதல் தொடங்குகின்றன.

நேற்று நடந்த கோலாகல தொடக்க விழா மற்றும் கண் கவர் இனியவை நாற்பது பேரணியைத் தொடர்ந்து இன்று முதல் முக்கிய நிகழ்வுகளுக்குள் போகிறது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு.

பொதுக் கண்காட்சி திறப்பு

இன்று காலை 9.30 மணிக்கு செம்பனார் கோவில் சகோதரர்களின் மங்கல இசையுடன் 2ம் நாள் நிகழ்வு தொடங்குகிறது.

அதன் பின்னர் 10.30 முதல் 11.30 வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. லாரன்ஸ் கலைக் குழுவினரின் மாற்றுத் திறனாளிகள் வழங்கும் கலை நிகழ்ச்சிகள், பாலு குழுவினர் வழங்கும் சலங்கை ஆட்டம், சின்னப் பொண்ணு குமார் மற்றும் பலர் வழங்கும் கிராமியப் பாடல்கள் இடம் பெறுகிறது.

நண்பகல் 12 மணிக்கு பொதுக் கண்காட்சி திறப்பு நிகழ்சசி நடைபெறுகிறது.

விழாவுக்கு மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி முன்னிலை வகிக்கிறார். சிறப்பு விருந்தினராக மலேசிய அமைச்சர் டாக்டர் சுப்பிரமணியம் கலந்து கொள்கிறார்.

இணையத்தள கண்காட்சி

இணையத்தள கண்காட்சித் திறப்பு நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் முன்னிலை வகிக்க, சிறப்பு விருந்தினறாக யுனெஸ்கோ இயக்குநர் ஆறுமுகம் பரசுராமன் கலந்து கொள்கிறார்.

புத்தகக் கண்காட்சியை திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்கு மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் முன்னிலை வகிக்க, மாலத்தீவு சுற்றுலாத்துறை அமைச்சர் அகமது நசீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

பகல் 12 மணிக்கு முகப்பரங்க பொழிவினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார் சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன்.

கணிப்பொறி வழி தமிழ் கற்றல்

பிற்பகலில் கருத்தரங்கம் தொடங்குகிறது. தலைமை தாங்குகிறார் முனைவர் சீதாலட்சுமி.

பிற்பகல் 1.30 முதல் 2 மணி வரை சிங்கப்பூரில் தமிழ்மொழி கற்றல், கற்பித்தலில் கணினியின் பயன்பாடு குறித்து முனைவர் ஆ.ரா.சிவக்குமாரன் பேசுகிறார்.

2 மணி முதல் 2.30 வரை மடிக்கணினியில் கன்னித் தமிழ்-ஒரு கற்றல் அனுபவம் குறித்து சம்பந்தம் மோகன் பேசுகிறார்.


2.30 முதல் 3 மணி வரை கல்விக் கூடங்ளில் தமிழ் உபயோகத்தகினைத் தரப்படுத்துதல் குறித்து வி.இராமன் பேசுகிறார்.

3 மணி முதல் 3.30 வரை இளங்கோ மெய்யப்பன் பேசுகிறார்.

இதேபோல வலைப்பூக்கள், கணிப்பொறி மொழியியல், தமிழ் மின்வரவு மற்றும் மின்னகராதிகள் ஆகிய தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறுகிறது.

கவியரங்கம்

பற்பகல் 2.30 மணிக்கு மாநாட்டு வளாகத்தில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில் கவியரங்கமும் நடைபெறுகிறது.

இதில் வா.மு.சேதுராமன், சிற்பி பாலசுப்ரமணியம், அப்துல் காதர், பொன்னடியான், ஆண்டாள் பிரியதர்ஷினி, வின்சென்ட் சின்னத்துரை, கவிதைப் பித்தன் ஆகியோர் கவி பாடுகிறார்கள்.

கருணாநிதி பேத்தி எழிலரசியின் வீணை இசை

மாலையில் கணிப்பொறி வழி தமிழ் கற்றல், கணிப்பொறி மொழியியல், தமிழ் மின்தரவு மற்றும் மின்னகராதிகள், இணைய தொழில்நுட்பத்தில் தமிழ் மொழி மற்றும் திறவூற்று செயல்கள், சமயம் வளர்த்த தமிழ் ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் தொடருகிறது.

மாலை 5.30 முதல் 6 மணி வரை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் வலியறுப்பு என்ற நாகம் கொடிசியா வளாகத்தில் நடைபெறுகிறது.

6.30 முதல் 7.30 வரை எழிலரசி ஜோதிமணியின் வீணை இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. எழிலரசி முதல்வர் கருணாநிதியின் பேத்தி ஆவர்.

போர்வாளும், பூவிதழும்

இரவு 7.30 முதல் 9 மணி வரை டாக்டர் பத்மா சுப்ரமணியம் குழுவினரின் போர்வாளும், பூவிதழும் என்ற நாட்டிய நாடக நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இரவு 9 மணி முதல் 10 மணஇ வரை இலங்கை நாட்டிய கலாமந்திர் கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன் குழுவினரின் இந்திய வம்சாவளி மரபு நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இத்துடன் 2ம் நாள் நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X