For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரசார் பாரதி தலைவரை விசாரிக்க பிரதீபா அனுமதி: காமன்வெல்த் உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்பு

Google Oneindia Tamil News

டெல்லி : பிரசார் பாரதி தலைவர் பி. எஸ். லல்லி மீதான நிதி மோசடி குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அனுமதி அளித்துள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டதற்கு ஏற்பு பிரதீபா விசாரணைக்கு அனுமதி அளித்துள்ளார். பிரசார் பாரதி சட்டம் கடந்த 1990-ம் ஆண்டு இயற்றப்பட்டது. அதன்படி பிரசார் பாரதி தலைவர் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கும் முன் குடியரசுத் தலைவரிடம் அனுமதி பெற வேண்டும்.

அந்த சட்டத்தின்படி விசாரணை முடியும் வரை தலைவரை சஸ்பெண்டு செய்யலாம்.

குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் லல்லி மீதான விசாரணைக்கு ஒப்புதல் வழங்கியிருப்பதைத் தொடர்ந்து அவரை பதவியிலிருந்து நீக்கும் நடவடிக்கைகள் தொடங்கவுள்ளன.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த லல்லி 1971-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாவார். அவருக்கு காமன்வெல்த் ஊழல் உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்பு இருக்கிறது. இதனால் அவரை பதவியில் இருந்து நீக்க தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் நெருக்கடி கொடுத்து வருகிறது.

இருப்பினும் லல்லியை பதவியில் இருந்து நீக்க பிரதமர் அலுவலகம் முட்டுக்கட்டை போட்டுள்ளது. லல்லி கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தான் பிரசார் பாரதி சிஇஓ ஆனார். அவருக்கு பிரதமருடன் நெருக்கமான தொடர்பு உள்ளது. கடந்த காலங்களிலும் அவருக்கு பிரதமர் ஆதரவளித்துள்ளார்.

வழக்கறிஞர்களுக்கு நிறைய பணம் கொடுத்தது, டி20 கவரேஜ் கான்ட்ராக்ட் விட்டது உள்ளிட்ட பல வழக்குகளில் லல்லிக்கு தொடர்பிருபப்தாக மத்திய கண்காணிப்பு கமிஷன் தெரிவித்துள்ளது.

English summary
It"s scandal season in India. The latest one who has joined this list is Prasar Bharti CEO Lalli. A 1971 batch UP cadre IAS officer Lalli became the CEO in december 2006. He is accused of financial irregularities in Prasar Bharti. President Pratibha Patil has given her assent to carry on the SC inquiry on him. This aids the removal of Lalli.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X