For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜாவை சிபிஐ விசாரிப்பது திமுகவுக்கு அவமானம்-டிகே.எஸ்.இளங்கோவன்

Google Oneindia Tamil News

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை சிபிஐ விசாரிப்பது என்பது நிச்சயம் திமுகவுக்கு அவமானகரமான ஒரு விஷயம்தான். இருப்பினும் என்ன நடந்தது என்பதை மக்களிடம் நாங்கள் விளக்குவோம் என்று திமுக கருத்து தெரிவித்துள்ளது.

இதுவரை ராஜாவை முழுமையாக ஆதரித்துப் பேசி வந்த திமுக முதல் முறையாக ராஜா விவகாரத்தால் திமுகவுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜாவை இன்று சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், எம்.பியுமான டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், ராஜாவை சிபிஐ விசாரிப்பது திமுகவுக்கு தர்மசங்கடத்தை, அவமானத்தை ஏற்படுத்தவில்லை என்று எப்படி நாங்கள் கூற முடியும். நிசத்சயம் அது எங்களுக்கு தர்மசங்கடமாகத்தான் உள்ளது. நெருடலாகத்தான் உள்ளது. இருப்பினும் என்ன நடந்தது என்பதை நாங்கள் மக்களிடம் எடுத்துக் கூறுவோம்.

மாவட்ட அளவிலான கூட்டங்களுக்கு திமுக திட்டமிட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பேச்சாளர்களைக் கொண்டு இக்கூட்டங்கள் வாயிலாக 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராஜாவுக்குத் தொடர்பு இல்லை என்பதை விளக்கப் போகிறோம். அரசியல் பேச்சாளர்களாக இல்லாமல், தொழில்நுட்ப அறிவும், தொலைத் தொடர்பு கொள்கை குறித்து நன்கு அறிந்தவர்களையும் தேர்ந்தெடுத்து இக்கூட்டங்களில் பேச வைக்கவுள்ளோம்.

அதேசமயம், ராஜாவுக்கு எதிராக சிபிஐ ஏதாவது தகவலை முன்வைத்தால், ராஜாவுக்கு எதிரான நடவடிக்கை குறித்து திமுக சிந்திக்கும்.

மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ள தொகை (ரூ. 1.76 லட்சம் கோடி) என்பது ஊதிப் பெரிதாக்கப்படுகிறது.

ராஜைவை நாங்கள் நம்புகிறேம். இதனால்தான் அவருக்கு கட்சி முழு மூச்சான ஆதரவைத் தெரிவிக்க முடிவு செய்தது என்றார் இளங்கோவன்.

English summary
The DMK has, for the first time, conceded that the 2G controversy centred around its MP and former Telecom Minister A Raja has come as an embarrassment to the party. "How can we say that the questioning by the CBI is not embarrassing," asked party spokesman T K S Elangovan, MP. "The charges made against our minister are definitely an embarrassment for us. But the party will go to people and explain what has happened," he told.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X