For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் ஜன 1-ம் தேதி முதல் இலவச பொங்கல் பை... கருணாநிதி வழங்குகிறார்!

By Chakra
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி 6 பொருள்கள் அடங்கிய சிறப்பு பைகளை வழங்குகிறது தமிழக அரசு. ஜன 1-ம் தேதி இந்த விநியோகத்தைத் தொடங்கி வைக்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி.

ரேஷன் கடைகளில் பொங்கலுக்கான தேவையான பொருட்களை எல்லோரும் வாங்கி பயன் அடையும் வகையில் இலவசமாக பொங்கல் பை வழங்கப்படுகிறது.

இந்த பையில் பச்ச அரிசி 1/2 கிலோ, வெல்லம் 1/2 கிலோ, பாசி பயிறு 100 கிராம், முந்திரி 10 கிராம், திராட்சை 5 கிராம், ஏலக்காய் 5 கிராம் ஆகியவையும் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 1 கோடியே 92 லட்சம் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு இந்த பொங்கல் பையை வருகிற 1-ந்தேதியில் ரேஷன் கடைகளில் வழங்க அரசு ஏற்பாடு செய்து உள்ளது.

இந்த திட்டத்தை 1-ந்தேதி பல்லாவரத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். விழாவுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

உணவு துறை அமைச்சர் எ.வ.வேலு முன்னிலை வகிக்கிறார். அமைச்சர் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பாலு எம்.பி., பல்லாவரம் நகரசபை தலைவர் இ.கருணாநிதி ஆகியோரும் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த விழாவில் பொங்கல் பண்டிகைக்காக ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி-சேலைகளையும் முதல்வர் கருணாநிதி வழங்குகிறார்.

அதே சமயம் தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்கள் இலவச வேட்டி-சேலை, மற்றும் பொங்கல் பை வழங்குகிறார்கள்.

English summary
Tamil Nadu govt will distribute free Pongal packages with 6 items to poor people. Chief Minister Karunanidhi will be attended the distribution function at Pallavaram on Jan 1.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X