For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெடிகுண்டு புரளி: மாலத்தீவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்

By Siva
Google Oneindia Tamil News

கொழும்பு: கொழும்பில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மாலத்தீவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்து 199 பயணிகளை ஏற்றிக் கொண்டு இலங்கை அரசின் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஏ-340 நேற்று பிற்பகல் லண்டனுக்குப் புறப்பட்டது.

அந்த விமானத்தில் பயணித்த பிரிட்டன் பயணி கிளெமென்ட் போல் என்பவர் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறியதையடுத்து விமானம் அவசரமாக மாலத் தீவில் தரையிறக்கப்பட்டது.

விமானம் தரையிறங்கியதும் மாலத் தீவு பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் வெடிகுண்டுகள் சிக்கவில்லை. இதையடு்த்து சுமார் 1 மணி நேரம் கழித்து விமானம் லண்டனுக்குப் புறப்பட்டது.

வெடிகுண்டு புரளி கிளப்பிய பிரிட்டன் பயணி கைது :

வெடிகுண்டு இருப்பதாக புரளியைக் கிளப்பிய பிரிட்டன் பயணியை மாலத்தீவு போலீசார் கைது செய்துள்ளனர்.

English summary
A Srilankan airlines flight A-340 headed for London from Colombo with 199 passengers made emergency landing in Maldives after a paasenger informed that there was a bomb in it. Later it was found that the passenger fooled everyone and flight left for London after an hour. Sri Lankan tamil websites published this news.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X