For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை திமுக அமைச்சர்கள் விலகல் கடிதத்ததைக் கொடுக்கிறார்கள்

Google Oneindia Tamil News

DMK Ministers
டெல்லி: மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலிருந்து விலகுவதாக திமுக அறிவித்துள்ள நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை, நாளை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுக்கவுள்ளனர்.

இத்தகவலை திமுக நாடாளுமன்றக் குழுத்தலைவர் டி.ஆர்.பாலு இன்று தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி தொகுதிப் பங்கீடு தொடர்பாக பெரும் குடைச்சல் கொடுத்து வந்ததால் நேற்று அதிரடியாக ஆட்சியிலிருந்து விலகுவதாக திமுக அறிவித்தது. வெளியிலிருந்து ஆதரவு என்றும் அறிவித்துள்ளது.

இதுகுறித்து விளக்கிய நாடாளுமன்ற திமுக தலைவர் டி.ஆர்.பாலு கூறுகையில், பிரதமரை திமுக அமைச்சர்கள் நேரில் சந்தித்து ராஜினாமா கடிதங்களைக் கொடுப்பார்கள். பேக்ஸ் மூலம் அனுப்ப மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

முடிவை அறிவித்து விட்ட போதிலும் உடனடியாக திமுக அமைச்சர்கள் ராஜினாமா செய்யவில்லை. காங்கிரஸ் தரப்பிலிருந்து என்ன ரியாக்ஷன் வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, நாளை திமுக அமைச்சர்கள் ஆறு பேரும் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து தங்களது விலகல் கடிதத்தைத் தருவார்கள் என்று தெரிவித்தார்.

English summary
After the decision of pull out from UPA govt, DMK is yet to seek PM's appointment to submit its Ministers' resignation letters. DMK Ministers may meet PM this evening or by tomorrow to submit their quit letters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X