For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க வலியுறுத்தலால் 2006ல் மணிசங்கர அய்யர் பதவி பறிக்கப்பட்டதா?

Google Oneindia Tamil News

Manishankara Aiyar
லக்னோ: அமெரிக்காவின் வலியுறுத்தல் காரணமாக 2006ம் ஆண்டு, தன்னிடமிருந்து பெட்ரோலியத் துறை பறிக்கப்பட்டதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் உண்மையில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்க நிர்ப்பந்தத்தால்தான் எனது பெட்ரோலியத்துறை 2006ம் ஆண்டு பறிக்கப்பட்டு, முரளி தியோராவிடம் கொடுக்கப்பட்டதாக விக்கிலீக்ஸ் கூறியுள்ளதில் உண்மை இல்லை. ஆனால் எனது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதால் அமெரிக்கா மகிழ்ச்சி அடைந்தது என்பது உண்மையே.

முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், எனக்கு தற்காலிகமாகத்தான் பெட்ரோலியத்துறை வழங்கப்பட்டிருந்தது. அப்போது நான் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக இருந்தேன். என்னிடம் 20 மாத காலம் பெட்ரோலியத்துறை இருந்தது. அப்போது எனது பணியை நான் சிறப்பாகவே செய்தேன் என்று கருதுகிறேன்.

நான் பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்தபோதுதான் ஈரான்-பாக்-இந்தியா பைப்லைன் திட்டம் திட்டமிடப்பட்டது என்பதில் எனக்குப் பெருமை உண்டு. அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி இதை நாம் அப்போது திட்டமிட்டோம் என்றார் அய்யர்.

English summary
Former Union Minister Mani Shankar Aiyar today rubbished Wikileaks expose that he was replaced by Murli Deora as Petroleum Minister in 2006 under US pressure. He, however noted that the US was happy that he was removed. "It is rubbish that petroleum portfolio was taken from me as the US was unhappy," Aiyar told reporters in a reply to a question on Wikileaks reports.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X