For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீதியுள்ள 600 ஏக்கரில் டாடா தொழிற்சாலை அமைத்துக் கொள்ளலாம்!-மம்தா

By Shankar
Google Oneindia Tamil News

கொல்கத்தா: சிங்கூரில் டாடாவுக்கு ஒதுக்கப்பட்ட 1000 ஏக்கர் நிலத்தில், விவசாயிகளின் விருப்பத்துக்கு மாறாக கையகப்படுத்தப்பட்ட 400 ஏக்கர் நிலம், மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்த 400 ஏக்கர் நிலம் போக மீதியுள்ள 600 ஏக்கரில் டாடா தனது தொழிற்சாலையை அமைத்துக்க கொள்ளலாம் என்று மம்தா அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியான இரண்டாவது தினமே, மே வங்காள புதிய முதல்வராக மம்தா பானர்ஜி பதவி ஏற்றதற்கு தொழிலதிபர் ரத்தன் டாடா வாழ்த்து தெரிவித்தார்.

மம்தாவின் தலைமையில் மேற்கு வங்க மாநிலம் அனைத்து துறைகளிலும் நல்ல வளர்ச்சி பெறும் என்று அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

டாடாவின் நானோ தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா நடத்திய போராட்டம் மிகப் பிரசித்தம். இந்தப் போராட்டத்தாலேயே டாடா தனது தொழிற்சாலையை குஜராத்துக்கு கொண்டுபோனது.

ஒருவகையில், மம்தாவின் இந்த வெற்றிக்கு டாடாவுக்கு எதிரான அவரது போராட்டமும் கூட ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tata Group Chairman Ratan Tata has congratulated West Bengal Chief Minister Mamata Banerjee on her resounding success in the recently concluded State Assembly polls. Tata's letter comes a couple of days after the chief minister's announcement of the return of 400 acres of Tatas' land at Singur to unwilling farmers whose land was acquired. Banerjee also said that her government had no objection to the Tatas building a factory on the remaining 600 acres of land at the project site.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X