For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'நெற் களஞ்சியமான' தஞ்சைக்கு வந்த ஆந்திர அரிசி!

By Chakra
Google Oneindia Tamil News

Rice
தஞ்சாவூர்: ஆந்திராவிலிருந்து தஞ்சைக்கு ரயில் மூலம் 52 வேகன்களில் 3,500 டன் புழுங்கல் அரிசி வந்தது.

தமிழகத்தில் பொது வினியோகத்திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு அரிசி வழங்குவதற்காக ஆந்திராவில் உள்ள அரிசி மத்திய சேமிப்புக் கிடங்கிருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக பொது விநியோகத் திட்டத்தில் பொது மக்களுக்கு வழங்கப்படும்.

இதே போல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள மத்திய சேமிப்புக் கிடங்கிற்கும் அரிசி அனுப்பி வைக்கப்பட்டு அந்த அரிசி தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதே போல் அரிசி ஆந்திராவில் உள்ள காக்கிநாடா பகுதியில் இருந்து தஞ்சைக்கு ரயிலில் எடுத்துவரப்பட்டது.

அதன்படி நேற்று ஆந்திராவில் உள்ள மறியலகுடாவில் இருந்து ரயில் மூலம் 3,500 டன் புழுங்கல் அரிசி ரயில் மூலம் தஞ்சை வந்தது. 52 வேகன்களில் வந்த இந்த அரிசியை அங்கிருந்து லாரிகள் மூலம் தஞ்சையில் உள்ள மத்திய சேமிப்புக் கிடங்கிற்கு எடுத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

English summary
About 3500 tons of boiled rice sent from Union rice warehouse to Tanjore for public distribution scheme. The rice will be distributed to Tanjore, Trichy, pudhukkottai, Nagai district people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X