For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு 80 அதிரடிப்படை வீரர்கள் வருகை!

By Chakra
Google Oneindia Tamil News

Madurai Meenakshi Temple
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த ஹைதராபாத்திலிருந்து 80 விரைவு அதிரடிப்படை வீரர்கள் வரவுள்ளனர்.

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டலும் பயங்கரவாத அச்சுறுத்தலும் தொடர்ந்து வந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, மாதந்தோறும் மத்திய உளவுத் துறை அறிவுரை வழங்கி வருகிறது.

இதை உள்ளூர் காவல்துறையினர் செயல்படுத்துகின்றனரா என, மாநில நுண்ணறிவுப் பிரிவு மற்றும் மத்திய உளவுத் துறை அதிகாரிகளும் ஆய்வு செய்கின்றனர்.

இதற்கிடையே மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, முக்கிய கோவில் தலங்களைப் பாதுகாக்க மத்திய அரசு, விரைவு அதிரடிப் படையை உருவாக்கியது. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் போது எந்தெந்த வகையி்ல் அதை முறியடிக்கலாம் என்பது குறித்து, இப்படை வீரர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன்படி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் ஒத்திகை நடத்த ஜூன் 17ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அதிரடிப்படை முகாமிலிருந்து 80 வீரர்கள் 2 கமாண்டர்கள் தலைமையில் மதுரை வருகின்றனர்.

23ம் தேதி மதுரையில் முகாமிடும் இவர்கள் கோவிலில் பயங்கரவாதிகளை முறியடிக்கும் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபடவுள்ளனர்.

English summary
80 commondos from Hyderabad will arrive at Madurai to conduct anti-terror training at Meenakshi Amman temple. They along with police department will review the security arrangements at the temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X