For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எடியூரப்பா-2வது வழக்கின் ஜாமீன் மனு மீதான விசாரணை நவ. 8க்கு ஒத்திவைப்பு

Google Oneindia Tamil News

Yeddyurappa
பெங்களூர்: நிலமோசடி புகார் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை, கர்நாடக உயர்நீதிமன்றம் வரும் 8 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

சட்டவிரோத நில மோசடி மற்றும் சுரங்க ஊழல் தொடர்பான இரு வழக்குகளிலும் ஜாமீன் வழங்கமுடியாது என பெங்களூர் லோக் ஆயுக்தா நீதிமன்றம் அறிவித்ததை தொடர்ந்து கர்நாடக முன்னாள் முதல்வர் அக்டோபர் 15-ம் தேதி எடியூரப்பா கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தனது உடல்நிலையை காரணம் கூறி தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ரூ. 5 லட்சம் நிபந்தனை ஜாமீன்

மனு மீதான விசாரணை இரண்டுமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை எடியூரப்பாவிற்கு ஒரு வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பி.வி. பின்டோ 5 லட்சம் ரூபாய் சொந்த ஜாமீனில் எடியூரப்பாவை விடுவித்தார். மற்றொரு மனு மீதான வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

8-ம் தேதி ஒத்திவைப்பு

இந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணையை வரும் 8-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

எடியூரப்பா மீது 5 குற்றச்சாட்டுகள் உள்ளன. இவற்றில் இரண்டு வழக்குகளின் கீழ் அவர் கைது கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று வழக்குகளில் அவர் முன்ஜாமீன் பெற்றுள்ளார். ஒரு வழக்கில் வியாழக்கிழமை ஜாமீன் வழங்கப்பட்டது. மற்றொரு வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் அவர் மீண்டும் சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

English summary
Former Karnataka Chief Minister BS Yeddyurappa's 2nd bail hearing was adjourned to Nov 8. In a setback for the former Karnataka Chief Minister, the High Court today saying that the matter will be taken up on November 8th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X