For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சத்யம் ராமலிங்க ராஜுவுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!

By Shankar
Google Oneindia Tamil News

Ramalinga Raju
டெல்லி: சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜு உள்ளிட்ட மூவருக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் நடந்த பல கோடி ரூபாய் முறைகேடுகள், கணக்குகளில் மோசடி போன்றவை காரணமாக அதன் நிறுவனரும் அப்போதைய தலைவருமான ராமலிங்க ராஜுவைக் கைது செய்தது சிபிஐ.

தொடர்ந்து அவரது தம்பி ராம ராஜு, தலைமை நிதி அலுவலர் வடாலா சீனிவாஸ் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இரண்டு ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் ராமலிங்க ராஜு சிறையில் இருந்தார்.

இடையில் அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் அதனை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததது.

இதைத் தொடர்ந்து ராமலிங்க ராஜூ, சகோதரர் ராம ராஜு மற்றும் வடாலா சீனிவாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச, மூவருக்கும் ஜாமீன் வழங்கி இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

English summary
The Supreme Court on Friday granted bail to erstwhile Satyam Computers founder-chairman B Ramalinga Raju, his brother B Rama Raju and former chief financial officer V Srinivas. An apex court bench of Justice Dalveer Bhandari and Justice Dipak Misra said from the facts of the case and considering the totality of the circumstances, it was appropriate to grant them bail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X