For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீர் குறித்த தவறான மேப் -இந்தியா கண்டனம் - யு.எஸ். அரசு வெப்சைட்டிலிருந்து நீக்கம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள காஷ்மீர் பகுதியை பாகிஸ்தானுடன் இணைந்த பகுதியாக குறிப்பிட்டு அமெரிக்காவின் வெளியுறவுத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்ட தவறான வரைபடம் இந்தியாவின் கடும் கண்டனத்தைத் தொடர்ந்து அதிலிருந்து நீக்கப்பட்டு விட்டது.

அமெரிக்க வெளியுறவுத்துறையின் www.state.gov என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில், தான் தூதரக உறவு வைத்துள்ள நாடுகளின் பட்டியலையும், அதன் தேசியக் கொடி, வரைபடத்தையும் வெளியிட்டுள்ளது. அந்த இணைப்புகள் வெளியுறவுத்துறையின் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.

அதில் இந்தியா குறித்த பகுதியில், தவறான இந்திய வரைபடத்தை அமெரிக்க அரசு வெளியிட்டிருந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியை முழுமையாக பாகிஸ்தானுடன் இணைத்துள்ளனர். அதேசமயம், சீனா ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியான அக்ஷய் சீன் பகுதியை இந்தியா சொந்தம் கொண்டாடும் பகுதி என்று வெறும் ஏரோ மார்க் மட்டும் போட்டு குறிப்பிட்டிருந்தனர்.

இந்தியா கண்டனம்

இதுபோன்ற தவறான படத்தை பிரசுரித்ததற்கு இந்தியா சார்பில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அமெரிக்க வெளியுறவுத் துறை இணையதளத்தில் இருந்த இந்தியாவின் வரைபடத்தில் தவறு இருப்பது குறித்து அந்நாட்டிடம் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் சர்வதேச எல்லைகள் தொடர்பாக வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நமது கவலையைத் தெரிவிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சர்ச்சைக்குரிய அந்த வரைபடம் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது.

எந்த உள்நோக்கமுமில்லை

இது குறித்து கருத்துத் தெரிவித்த டெல்லியிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரி, "தவறான வரைபடம் குறித்து எங்களுக்குத் தகவல் வந்ததும் அதை நீக்கி விட்டோம். இந்தச் சம்பவத்தில் அமெரிக்காவுக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. இந்திய அரசிடமும் இதுபற்றி பேசியிருக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார். சரியான வரைபடம் விரைவில் இணைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

English summary
The US State Department has removed “inaccurate” maps of India and Pakistan from its website which did not reflect the correct boundary and geographical locations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X