For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'கடவுளை'க் கண்டுபிடித்த பீட்டர் ஹிக்ஸ் ... 'பெட்' கட்டி 100 டாலரை இழந்த ஸ்டீபன் ஹாக்கிங்!

Google Oneindia Tamil News

Peter Higgs and Stephen Hawking
லண்டன்: கடவுளின் அணுத் துகள் என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸான் குறித்து முதல் முறையாக தெரிவித்த விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ், தான் சொன்னதை சாதித்துக் காட்டியுள்ளார். இதற்காக அவருக்கு நோபல் பரிசு அளிக்க வேண்டும். அதேசமயம், அவரால் அதைக் கண்டுபிடிக்க முடியாது என்று நான் சவால் விட்டு 100 டாலர் பெட் கட்டியிருந்தேன். தற்போது பெட்டில் நான் தோற்று விட்டேன் என்று கூறியுள்ளார் பிரபல இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங்.

உலகப் புகழ் பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங். பேச முடியாமல், முற்றிலும் முடங்கிய நிலையில் சக்கர நாற்காலியில்தான் பல வருடங்களாக இவர் காலத்தை தள்ளி வருகிறார். ஆனால் தற்போது 70 வயதாகும் இவரது திறமைகள் அபாரமானவை. தி ப்ரீப் ஹிஸ்டரி ஆப் டைம் என்ற இவரது நூல் மிகப் பிரபலமானது. பிளாக் ஹோல் குறித்து அதில் அவர் அவ்வளவு அழகாக, எளிமையாக விளக்கியிருப்பார்.

தற்போது கடவுள் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பு குறித்து ஹாக்கிங் கருத்து தெரிவித்துள்ளார். ஹிக்ஸ் போஸான் குறித்து முதன் முதலில் தெரிவித்தவரான பீட்டர் ஹிக்ஸை இவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து ஹாக்கிங் வெளியிட்டுள்ள கருத்தில், பீட்டர் ஹிக்ஸ் நோபல் பரிசுக்கு முழுமையாக தகுதியானவர். இவரது கடவுளின் அணுத்துகள் கண்டுபிடிப்பு மிகப் பெரிய விஷயம். மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கார்டன் கார்னேவிடம், பீட்டர் ஹிக்ஸால், ஹிக்ஸ் போஸானை கண்டுபிடிக்க முடியாது என்று நான் சவால் விட்டிருந்தேன். 100 டாலர் பெட்டும் கட்டியிருந்தேன். ஆனால் அது தவறு என்பதை ஹிக்ஸ் நிரூபித்து விட்டார். இப்போது எனக்கு 100 டாலர் நஷ்டமாகி விட்டது என்று கூறியுள்ளார் ஹாக்கிங்.

கண்ணுக்குத் தெரியாத ஒரு அணுத்துகள்தான் இந்த பிரபஞ்சத்தைத் தாங்கி நிற்கிறது என்பதை முதல் முதலில் சொன்னவர் பீட்டர் ஹிக்ஸ்தான். அந்தத் துகள்தான் ஹிக்ஸ் போஸான் எனப்படும் கடவுளின் அணுத்துகள். இவர் இதை முதலில் சொன்னபோது இது வெறும் கட்டுக்கதை, இல்லாததைச் சொல்கிறார் என்று விஞ்ஞானிகள் பலரும் கேலி செய்தனர். இதுகுறித்து அவர் எழுதிய ஒரு ஆய்வுக் கட்டுரையை ஒரு அறிவியல் சஞ்சிகை நிராகரிக்கக் கூட செய்தது. இயற்பியலின் அடிப்படையைத் தகர்க்க முயல்கிறார் பீட்டர் ஹிக்ஸ் என்று பல விஞ்ஞானிகள் குற்றம் சாட்டக் கூட செய்தனர்.

அப்போது 34 வயதான பீட்டர் ஹிக்ஸ், எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் இயற்பியலாளராக இருந்தார். தனது வாதத்தை அவர் கைவிடவில்லை. அவரது கூற்று சரியே என்று தொடர்ந்து கூறி வந்தார். இருப்பினும் அவரால் அதை நிரூபிக்க முடியாமலேயே இருந்தது. தற்போதுதான் ஹிக்ஸ் போஸான் இருப்பது உண்மை என்று தெரிய வந்து பீட்டர் ஹிக்ஸ் லைம்லைட்டுக்கு வந்துள்ளார்.

கடந்த 48 வருடங்களாக வெறும் கற்பனைக் கதாபாத்திரமாகவே இருந்து வந்த கடவுளின் அணுத்துகள் உண்மைதான் என்பதை ஜெனீவா அருகே ஐரோப்பிய நாடுகள் இணைந்து அமைத்த அணு ஆராய்ச்சிக் கழகம் நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அன்று புலவர்கள் சண்டையில் மொழி செழித்தது, வளர்ந்தது. இன்று விஞ்ஞானிகளின் சண்டையில் நமது 'அடிப்படை' தெரிய வந்துள்ளது. எல்லாம் நன்மைக்கே..

English summary
Stephen Hawking has said that Peter Higgs deserved a Nobel Prize for the groundbreaking discovery of the " God particle", but admitted that the findings have come at a cost for him. The 70-year-old theoretical physicist lost a 100-dollar bet as he believed that the Higgs Boson wouldn't be found. "I had a bet with Gordon Kane of Michigan University that the Higgs particle wouldn't be found. It seems I have just lost 100 dollars," the Telegraph quoted Hawking as saying.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X