For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'இலங்கை படையினருக்குப் பயிற்சி குறித்த ஜெயலலிதா எதிர்ப்பை பரிசீலிப்போம்' - மத்திய அரசு!

By Shankar
Google Oneindia Tamil News

Union govt will consider Jaya's objection for training Lankan army men
டெல்லி: உதகையில் இலங்கைப் படையினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதற்கு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ள எதிர்ப்பைப் பரிசீலிப்போம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் இலங்கை ராணுவ அதிகாரிகள் இரண்டு பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று கடும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ரஞ்சன் மத்தாயிடம் இது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "வெலிங்கடன் ராணுவ பயிற்சி மையத்தில் இலங்கை ராணுவ அதிகாரிகள் இரண்டு பேருக்கு பயிற்சி அளிக்கக் கூடாது என்ற ஜெயலலிதாவின் கோரிக்கை தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் பரிசீலிக்கும்," என்றார்.

வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் இலங்கை ராணுவ அதிகாரிகள் இருவருக்கு இந்திய ராணுவம் சிறப்புப் பயிற்சி அளித்து வருகிறது.

ஏற்கெனவே தாம்பரத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. அங்கு பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு காட்டியதால், அவர்களை வேறு முகாமுக்கு அனுப்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Union external affairs ministry says that the govt will consider the objection of TN CM Jayalalithaa for giving training to Sri Lankan army officers.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X