For Daily Alerts
Just In
குஜராத் கட்ச் பகுதியில் லேசான நிலநடுக்கம்- ரிக்டரி 4.5 அலகுகள் பதிவு

குஜராத் மாநிலம் கட்ச் பூஜ் பகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கானோர் இந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். அதன் பின்னர் ரிக்டர் அளவுகோலில் 2 முதல் 4 அலகுகள் வரையில் அவ்வப்போது அதிர்வுகள் உணரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று சோபுரி பகுதியில் பகல் 12.03 மணி அளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. இது 4.5 அலகுகளாக ரிக்டரில் பதிவாகி இருந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.