For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூக்கத்துல நடக்கிற வியாதி...நடுவானில் விமான கதவை திறந்த இலங்கை அமைச்சர் மகன் விளக்கம்!

By Mathi
Google Oneindia Tamil News

Ramith Rambukwella says he was sleep-walking
கொழும்பு: 35,000 அடி உயரத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் பறந்து கொண்டிருந்த குடிபோதையில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற இலங்கை ரிக்கெட் வீரரும் இலங்கை அமைச்சர் கேகலிய ரம்புக்வெல மகனுமான ரம்பித் ரம்புக்வெல தமக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பதாக விளக்கம் அளித்திருக்கிறார்.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பயணித்த பிரிட்டின் ஏர்வேஸ் விமானத்தில் குடிபோதையில் இருந்த ரம்பித் ரம்புக்வெல, கழிப்பறைக்கு செல்லும் போது மப்பில் விமானத்தின் கதவை திறக்கப் போராடினார். இதனால் நடுவானில் பெரும் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது. பின்னர் விமான ஊழியர்களும் இலங்கை அணியின் சக வீரர்களும் சமாதானப்படுத்தி ரம்பித் ரம்புக்வெலவை இருக்கையில் அமர வைத்தனர்.

இந்நிலையில் தமது மகன் செய்தது சிறு சம்பவம்தான் இதை ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன என்று கேகலிய ரம்புக்வெல கூறியிருந்தார். ஆனால் ரம்பித் ரம்புக்வெலவோ அதிரடியாக ஒரு விளக்கத்தை அளித்தார். அதாவது, விமானத்தில் தாம் மருந்தவில்லை. சின்ன வயதில் இருந்தே தூக்கத்தில் என்ன செய்கிறேன் என்பது தெரியாத ஒரு பழக்கம் இருக்கிறது. அப்படித்தான் விமானத்தின் கதவைத் திறக்கவும் முயற்சித்தேன்.. நடுவானில் விமானக் கதவை திறப்பதற்கு நான் ஒன்றும் முட்டாள் அல்ல என்றார் அவர்.

English summary
Sri Lanka ‘A’ team cricketer Ramith Rambukwella, the son of Mass Media and Information Minister Keheliya Ramukwella, said yesterday that he had been sleep-walking when he tried to open the cabin door of a British Airways passenger flight at a height of 35,000 feet. He said he had not been drunk.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X