For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைச்சர் ஆனந்த் சர்மா பெயருக்கு பதில் கமல் நாத் பெயரை தப்பாக அறிவித்த ஐ.நா.

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவின் பெயருக்கு பதில் கமல் நாத்தின் பெயரை ஐ.நா. தவறாக அறிவிப்பு செய்துள்ளது.

வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் இன்று காலை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனை தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்து ஐ.நா. சார்பில் இன்று காலை 9 மணிக்கு ஊடகங்களுக்கு செய்தி அனுப்பப்பட்டது.

அதாவது, புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு: பொதுச் செயலாளர் இந்தியாவின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஸ்ரீ கமல் நாத் அவர்களை இன்று காலை 10 மணிக்கு 38வது தளத்தில் வைத்து சந்தித்து பேசுகிறார் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைப் பார்த்த ஊடகங்கள் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கமல் நாத் வருவதாக தகவல்கள் இல்லையே என்று வியந்தன. இறுதியில் பார்த்தால் ஆனந்த் சர்மாவுக்கு பதில் கமல் நாத் பெயரை ஐ.நா. தவறுதலாக குறிப்பிட்டது தெரிய வந்தது.

அதன் பிறகு கமல் நாத் அல்ல ஆனந்த் சர்மா பான் கி மூனை சந்திக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது.

English summary
The United Nations Media Department on Thursday made a faux pas when it identified Commerce and Industry Minister Anand Sharma as his Cabinet colleague Kamal Nath. Sharma, who is leading a high-profile business delegation to the US, called on UN Secretary General Ban Ki-moon this morning and the media alert sent out to various media outlets at 9 am in the morning said, "Photo Opportunity: The Secretary-General with H.E. Mr Shri Kamal Nath, Minister of Commerce Industry of India at 10 am on the 38th floor."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X