For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜப்பான் புகுஷிமா அணு உலை அருகே கடும் நிலநடுக்கம்… மக்கள் பீதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டோக்கியோ: ஜப்பானில் உள்ள புகுஷிமாவில் நள்ளிரவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியேறினர்.

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6ஆக பதிவாகியுள்ளது. இதனால் கட்டடங்கள் பெருமளவில் குலுங்கின. ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

Japan Earthquake 2013: 6.0-Magnitude Quake Shakes Northeast, No Tsunami Risk

நிலநடுக்கம் காரணமாக அச்சமடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் உயிர், பொருள் சேதம் பற்றி தகவல் இல்லை. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டது. இதில் புகுஷிமா அணுமின் நிலையம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், ஏற்பட்ட கதிர்வீச்சால் பலர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், புகுஷிமா அணுமின் நிலையம் உள்ள பகுதியில் இன்று அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
A strong earthquake shook northeastern Japan on Sunday in the same region devastated by a giant tsunami and temblor 2-1/2 years ago, but there were no immediate reports of damage or injuries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X