ஐப்பசி மாத பூஜை..சபரிமலை கோவில் நடை 17ல் திறப்பு - மண்டல பூஜைக்கு என்னென்ன ஏற்பாடுகள்
சபரிமலை : ஐப்பசி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 17ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 5 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
கேரளத்தின் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலையில் பிரம்மச்சாரி கோலத்தில் ஐயப்பன் அருள்பாலிக்கிறார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜையை தவிர, ஓணம், பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா, விஷூ பண்டிகை மற்றும் விசேஷ நாட்கள் தவிர ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் புரட்டாசி மாத பூஜையையொட்டி கடந்த 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. 17ஆம் தேதி முதல் வழக்கமான பூஜை, வழிபாடுகள் 5 நாட்கள் நடைபெற்றது.

ஐப்பசி மாத பூஜை
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வரும் 17ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. ஐயப்பன் கோவில் நடை வரும் 17ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

கார்த்திகை மாத பிறப்பு
ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் நடக்கும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலைக்கு பக்தர்கள் யாத்திரை செல்வார்கள். அப்படி செல்பவர்கள் கடந்த 8ஆம் தேதி முதல் இணைய வழியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா பெருந்தொற்று பரவல் இருந்ததால், சபரிமலைக்கு பக்தர்களின் அளவு குறைவாகவே அனுமதிக்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் பக்தர்கள் வருகை தரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்டல, மகரவிளக்கு பூஜை
இந்த ஆண்டு, மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 15ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. நவம்பர் 16ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். டிசம்பர் 27ம் தேதியோடு மண்டல பூஜை முடிந்து சபரிமலை நடை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகர விளக்கு பூஜைக்காக, டிசம்பர் 30ம் தேதி சபரிமலை நடை மீண்டும் திறக்கப்பட்டு, 2023ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி நடை சாத்தப்படும். ஜனவரி 14ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடக்கும்.

முன்பதிவு
முன்பதிவு செய்வதற்கு, சபரிமலையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.sabarimalaonline.org என்ற முகவரியை பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. முன்பதிவு செய்யப்படுவதினால் மண்டல பூஜை தரிசனத்திற்காக தினசரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பம்பை
இந்த ஆண்டு நடக்கவிருக்கும் பூஜைகளுக்கு தினசரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு அறிவித்துள்ளது. சபரிமலைக்கு வருகை தருபவர்கள் தங்களது வாகனங்களை நிலக்கல் வரை கொண்டுவரலாம். அங்கிருந்து பம்பைக்கு கேரள அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications