பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - இந்தியாவில் அல்ல.. ஐக்கிய அரபு அமீரகத்தில் - விலை எவ்வளவு தெரியுமா?
அபுதாபி: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து இருக்கும் நிலையில் கடந்த மாதத்தை விட ஐக்கிய அரபு அமீரகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து இருக்கிறது.
கடந்த செப்டம்பர் மாதம் 2 வது வாரம் 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை கடுமையான சரிவை சந்தித்தது. இதனை தொடர்ந்து உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு வருகிறது.
உலகில் அதிகளவில் கச்சா எண்ணெய் எடுக்கும் நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு எண்ணெய் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

ஐக்கிய அரபு அமீரகம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் சர்வதேச அளவில் கச்சை எண்ணெய் மதிப்பை அடிப்படையாக கொண்டு பெட்ரோல், டீசல் விலை நிலவரம் முடிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அக்டோபர் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டு இருக்கிறது.

டீசல் விலை
அந்த வகையில் கடந்த மாதம் இந்திய மதிப்பில் ரூ.86.02 ஆக இருந்த டீசல் விலை, இந்த மாதம் ரூ.83.57 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் சூப்பர் 98 ரக பெட்ரோல் கடந்த மாதம் ரூ.75.79 ஆக விற்கப்பட்டு வந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் ரூ.67.35 ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது.

பெட்ரோல் விலை
ஸ்பெசன் 95 ரக பெட்ரோல் விலை கடந்த மாதம் இந்திய மதிப்பில் ரூ.73.35 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.64.90 ஆக விலை குறைந்து இருக்கிறது. ஈ பிளஸ் 91 என்ற வகை பெட்ரோல் ரூ.71.57 ஆக இருந்த நிலையில் தற்போது இந்திய மதிப்பில் ரூ.63.35 ஆக குறைந்து இருக்கிறது. இதனால் அந்நாட்டில் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்து இருக்கின்றனர்.

இந்தியாவில் எரிபொருள் விலை
கச்சா எண்ணெய் விலை குறைந்து இருக்கும் நிலையில் உலக நாடுகளைபோல் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், இந்தியாவில் ஓராண்டுக்கும் மேலாக ரூ.100 ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வரும் பெட்ரோல், டீசல் விலை 100 நாட்களுக்கும் மேலாக எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications