பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"2 மேஜர்".. பாஜகவை திணறடிக்க போகும் எதிர்க்கட்சிகள்.. இன்று கூடுகிறது கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர்

மழைக்கால கூட்டத்தொடர் இன்று கர்நாடக மாநில சட்டசபையில் தொடங்குகிறது

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடக மாநில சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது.. பெங்களூரு விதான சவுதாவில் கூடவுள்ள இந்த கூட்டத்தொடரில், பெங்களூரு மழை, 40 சதவீத கமிஷன் உள்ளிட்ட பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

கர்நாடகத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.. ஆனால், முன்கூட்டியே இங்கு தேர்தல் நடைபெறலாம் என்றும் தகவல்கள் பறந்து கொண்டிருக்கின்றன.

இப்படிப்பட்ட சூழலில், மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவது குறித்து கடந்த முறை நடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது, முதல்வர் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார்.

ஐடி கம்பெனிகள் ஆவேசத்திற்கு பணிந்த கர்நாடக அரசு.. பெங்களூர் வெள்ளம் பிரச்சினைக்கு தீர்வு என உறுதி ஐடி கம்பெனிகள் ஆவேசத்திற்கு பணிந்த கர்நாடக அரசு.. பெங்களூர் வெள்ளம் பிரச்சினைக்கு தீர்வு என உறுதி

விதானசவுதா

விதானசவுதா

அப்போது செப்டம்பர் 12-ந் தேதி அதாவது இன்று முதல் வருகிற 23-ந் தேதி வரை நடத்துவது என்று அப்போது கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.. அதன்படி, மழைக்கால கூட்டத்தொடருக்காக கர்நாடக சட்டசபை பெங்களூரு விதானசவுதாவில் இன்றைய தினம் திங்கட்கிழமை கூடுகிறது... இந்த கூட்டத்தொடர் வருகிற 23-ந் தேதி வரை நடக்க போகிறது.. 17 மற்றும் 18-ந் தேதிகள் விடுமுறை என்பதால், அந்த 2 நாட்கள் தவிர 10 நாட்கள் இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

 3 மேட்டர்கள்

3 மேட்டர்கள்

இன்று தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில், மறைந்த அமைச்சர் உமேஷ்கட்டிக்கு அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.. இந்த சட்டசபை கூட்டத்தொடரில் ஆளும் கட்சியை சிக்கலில் சிக்க வைக்க எதிர்க்கட்சியான காங்கிரஸ் தயாராகி வருகிறது... குறிப்பாக, 2 விஷயங்களை கையில் எடுக்க போவதாக தெரிகிறது.. முதலாவதாக, மாநிலத்தில் அரசு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களிடம் இருந்து அமைச்சர்கள், 40 சதவீத கமிஷன் கேட்பதாக ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் பகீர் குற்றச்சாட்டு கூறியிருந்தார். இதை தான் முதலில் கிளப்ப போகிறதாம் காங்கிரஸ்.

 முனிரத்னா பிளான்

முனிரத்னா பிளான்

அதுமட்டுமல்ல, எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார், 40 சதவீத கமிஷன் பிரச்சினையை சட்டசபையில் எழுப்புவோம் என்று ஓபனாகவே சொல்லிவிட்டார்.. இந்த விவகாரம் முற்றும் பட்சத்தில், அமைச்சர் முனிரத்னா உள்ளிட்ட சிலரை ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தவும் காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 குமாரசாமி செக்

குமாரசாமி செக்

அடுத்ததாக, பெங்களூரு மழை குறித்து, விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.. இந்த முறை பெங்களூரு நகரமே மூழ்கி போகும் அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது.. இதனால் ஐடி நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுவிட்டன.. இதனால், பெங்களூருவை விட்டு வெளியேறுவோம் என்று அந்த நிறுவனங்கள் மிரட்டல் விடுத்துள்ளன... இன்னொரு பக்கம் நிறைய மாவட்டங்களில் விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துவிட்டன.. பலருக்கு வீடுகள் இடிந்துவிட்டன..

 டரியல் பாஜக

டரியல் பாஜக

எனவே, இந்த மழை-வெள்ள பாதிப்பு பிரச்சினைகளை கூட்டத்தொடரில் எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக இதை குமாரசாமி எழுப்பக்கூடும் என தெரிகிறது.. ஆனால், எதிர்க்கட்சிகள் என்ன பிரச்சனைகளை எழுப்பி, கேள்விகளை கேட்டாலும் அதற்கு தயாராகவே மாநில அரசு இருப்பதாக தெரிகிறது.. இது தொடர்பாக முதல்வரும், தன்னுடைய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.. அப்படி எதிர்க்கட்சிகள் கேள்விகளை கேட்டால், பதிலுக்கு காங்கிரஸ் செய்த ஊழல்களை அவிழ்த்துவிடுவது என்றும் முடிவாகி இருப்பதாக தெரிகிறது..

 மாஸ் பிளான்கள்

மாஸ் பிளான்கள்

அதாவது கடந்த ஆட்சியில் நடந்த மின்சார துறை ஊழல், அர்க்காவதி நில முறைகேடு, அன்னபாக்யா திட்ட முறைகேடு உள்ளிட்டவற்றை அம்பலப்படுத்த போவதாக, முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார். ஆக, இரு தரப்பிலும் காரசார மற்றும் அனல்பறக்கும் விவாதங்கள் நடைபெற உள்ளது. இந்த சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி பெங்களூரு விதானசவுதாவை சுற்றி 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
2 Important issues are likely to be raised by the Congress and karnataka assembly meets today மழைக்கால கூட்டத்தொடர் இன்று கர்நாடக மாநில சட்டசபையில் தொடங்குகிறது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X