பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

”தூய்மை இந்தியா” திட்டத்தைப் பின்பற்றி குப்பைகளை சுத்தம் செய்த பெங்களூர் மாணவர்கள்!

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் உள்ள கல்லூரி மாணவர்கள் "தூய்மைஇந்தியா" அபிவிருத்தி திட்டத்தை பின்பற்றி சாலைகளை சுத்தப்படுத்தினர்.

பெங்களூர் விஜயா ஆசிரியர்கள் கல்லூரியை சேர்ந்த 160 மாணவர்கள் ஜெயநகர் தெருக்களில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Bangalore students follows Clean India project…

இது தொடர்பாக கருத்து தெரிவித்த முதுநிலை பட்டதாரி மாணவர் ராஜேஷ், "பிரதமர் மோடி தூய்மையான இந்தியா அபிவிருத்தித்திட்டத்திற்காக பிரபலமானவர்களை அழைத்தார். மக்கள் அவர்களை பின்பற்றுவார்கள் என மோடி அதனை செய்தார்.

ஆசிரியர்களையும் மக்கள் பின்பற்றுவார்கள். எங்கள் கல்லூரியை சுற்றியும் குப்பைகள் இருக்கும், நாங்கள் சுத்தப்படுத்திய பின் எங்கள் கல்லூரி இன்னும் அழகாக உள்ளது.

நாங்கள் இப்போது குப்பையை பிரித்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம், எங்கள் கல்லூரி மாணவர்கள் குப்பை அகற்றும் பணியில் ஈடுபடுவதை பார்த்து பிற கல்லூரி மாணவர்களும் இதனை செய்ய முன்வந்துள்ளனர்" என தெரிவித்தார்.

English summary
Bangalore College students were involved in “Clean India project”. The students from the college cleaning overall jaya nagar area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X