Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துருப்புச்சீட்டு.. கர்நாடகாவில் நுழையும் ‛குஜராத் மாடல்’.. ஆட்சியை தக்கவைக்க பாஜக மெகா பிளான்! என்ன?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. பாஜக, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்), ஆம்ஆத்மி கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. இந்நிலையில் தான் குஜராத் சட்டசபை தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று 7 வது முறையாக ஆட்சியை தக்க வைத்த நிலையில் கர்நாடகாவிலும் ‛தாமரை' சின்னத்துக்கு பெரும்பான்மை கிடைக்க ‛குஜராத் மாடல்'வியூகத்தை பாஜக கையில் எடுக்க உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2018 ல் தேர்தல் நடந்தது. யாருக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் எடியூரப்பா முதல்வராக பதவியேற்று 6 நாளில் ராஜினாமா செய்தார். அதன்பிறகு காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. முதல் அமைச்சராக ஜனதாதளம்(எஸ்) கட்சியின் குமாரசாமி இருந்தார்.

முதல் அமைச்சர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி வெறும் ஒரு ஆண்டு 2 மாதம் மட்டுமே நீடித்தது. காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சியின் 15க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவியதால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

கர்நாடகாவில் பாஜக ஆட்சி

கர்நாடகாவில் பாஜக ஆட்சி

இதையடுத்து கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்தது. முதல்வராக மீண்டும் எடியூரப்பா பதவியேற்றார். எடியூரப்பா 2 ஆண்டுகள் வரை முதல்வராக செயல்பட்டார். தற்போது 79 வயதை அடைந்துள்ள எடியூரப்பா வயது முதிர்வால் முதல்வர் ராஜினாமா செய்தார். இதையடுத்து பசவராஜ் பொம்மை முதல்வராக பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் கர்நாடகா மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறார். அதேபோல் மீண்டும் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்து வருகிறது.

கர்நாடகாவில் ‛குஜராத்’ மாடல்

கர்நாடகாவில் ‛குஜராத்’ மாடல்

சமீபத்தில் கர்நாடகாவுக்கு விசிட் செய்த அமித்ஷா பாஜக தனித்து போட்டிடும் என்று அறிவித்தார். இந்நிலையில் தான் கர்நாடகாவில் ‛குஜராத் மாடல்' அரசியலை கையில் எடுக்க முடிவு செய்து ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி குஜராத் மாநிலத்தை போல் ஏராளமான சிட்டிங் எம்எல்ஏக்கு இந்த முறையில் பாஜகவில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

‛குஜராத் மாடல்’ என்ன?

‛குஜராத் மாடல்’ என்ன?

குஜராத்தை பொறுத்தமட்டில் முதல்வர் பதவியை நரேந்திர மோடி ராஜினாமா செய்த பிறகு அங்கு 1+4 என்ற பார்முலா பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி 5 ஆண்டு ஆட்சியில் முதல் நான்கு ஆண்டு ஒருவர் முதல்வராகவும், அடுத்த ஒரு ஆண்டு புதிய நபர் முதல்வராகவும் இருப்பார். இது கடந்த 2014ல் முதல்வராக பொறுப்பேற்ற ஆனந்த பென் படேலில் பதவி விலகலில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இது அதிருப்தி அலை இன்றி பாஜகவுக்கு கைக்கொடுத்தது. மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜகவில் முன்னாள் முதல்வரான விஜய் ரூபானி, 5 அமைச்சர்கள் உள்பட மொத்தம் 38 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுக்கப்பட்டது. வயது முதிர்வு மற்றும் கட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட சர்வேயில் தோல்வி வாய்ப்பு உள்ளவர்கள் என 2 பிரிவுகளின் அடிப்படையில் இவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டது. இது குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு கைக்கொடுத்ததோடு வரலாற்று வெற்றியை பதிவு செய்ய வழிவகுத்தது. மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக 156 இடங்களில் வென்றது. கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் தொடர்ந்து 7 வது முறையாக குஜராத்தில் அந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்த பாணியை தான் கர்நாடகாவிலும் பாஜக செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது

3ல் ஒரு பங்கு எம்எல்ஏக்களுக்கு மறுப்பு

3ல் ஒரு பங்கு எம்எல்ஏக்களுக்கு மறுப்பு

இந்த குஜராத் மாடல் நடைமுறையில் தான் கர்நாடகா தேர்தலையும் சந்திக்க பாஜக பிளான் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி சமீபத்தில் கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பாவுக்கு பதில் பசவராஜ் பொம்மை நியமிக்கப்பட்டார். மேலும் கர்நாடகா தேர்தல் தொடர்பாக கட்சி சார்பில் சர்வேக்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த சர்வேக்களில் வெற்றி வாய்ப்பு இல்லாதவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என கூறப்படுகிறது. பாஜகவுக்கு தற்போது சபாநாயகர் உள்பட 118 பேர் எம்எல்ஏக்களாக உள்ளனர். அதன்படி தற்போதைய பாஜக எம்எல்ஏக்களில் 3ல் ஒரு பங்கு எம்எல்ஏக்களுக்கு சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என கூறப்படுகிறது. அப்படி பார்த்தால் 39 எம்எல்ஏக்கள் வரை கல்தா கொடுக்கப்படலாம். குறைந்தது 30 பேர் வரை தேர்தல் போட்டியில் இருந்து கழற்றி விடப்படலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக தற்போது பாஜக தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.

65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு...

65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு...

மேலும் பாஜகவை பொறுத்தமட்டில் இளம்வயதினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் முடிவில் உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அதிக விருப்பம் கொண்டுள்ளனர். இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுத்தால் தான் அது கட்சியின் நீண்டகால செயல்முறைக்கு சரியானதாக இருக்கும் என ‛தாமரை' கட்சி நினைக்கிறது. இதனால் கர்நாடகாவை பொறுத்தமட்டில் தற்போதைய சூழலில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மீண்டும் பாஜகவில் வாய்ப்பு வழங்கப்படாமல் இருக்கலாம் என கூறப்படுகிறது. அதன்படி பார்த்தால் மொத்தம் 20 பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர். இந்த பட்டியலில் தற்போதைய எம்எல்ஏக்களாக உள்ள முன்னாள் முதல் அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல் அமைச்சரும், தற்கொலை செய்த ஒப்பந்தாரர் கமிஷன் குற்றம்சாட்டியதால் சமீபத்தில் அமைச்சர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தவருமான கேஎஸ் ஈஸ்வரப்பா, ஜிஎச் திப்பா ரெட்டி, எஸ்ஏ ரவீந்திரநாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்த பட்டியலில் வரலாம் என கூறப்படுகிறது.

பிஎல் சந்தோஷ், கார்கேவின் சொந்த மாநிலம்

பிஎல் சந்தோஷ், கார்கேவின் சொந்த மாநிலம்

மேலும் 2024ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தென்மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டும் பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் அதனை தக்க வைக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இங்கு ஆட்சியமைத்தால் அது பிற தென்மாநிலங்களிலும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்புள்ளதால் பாஜக சார்பில் வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் அக்கட்சி அதிக அக்கறை காட்டுகிறது. மேலும் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக உள்ள பிஎல் சந்தோஷ் கர்நாடகாவை சேர்ந்தவர். இதனால் கர்நாடகா தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டிய கட்டாயம் பிஎல் சந்தோசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வேட்பாளர் தேர்வில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருடன் பிஎல் சந்தோஷ் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார். மேலும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட மல்லிகார்ஜூன கார்கேவின் சொந்த மாநிலமும் கர்நாடகா தான். இதனால் கர்நாடகா சட்டசபை தேர்தல் வெற்றி என்பது பாஜக மீது அதிருப்தி இல்லை என்பதை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இருக்கும் என்பதோடு 2024 நாடாளுமன்ற தேர்தலில் தென்மாநிலங்களில் பாஜகவுக்கு பூஸ்ட் கொடுக்கலாம் எனவும் அக்கட்சி தலைவர்கள் நம்புகின்றனர். அதோடு கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் தோற்றால் அது எதிர்வரும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில தேர்தல்களிலும் பாஜகவுக்கு சாதகமாக இருக்கலாம். இதனால் பாஜக மிகவும் கவனமாகவும், சாமர்த்தியமாகவும் வெற்றி ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு காய் நகர்த்தி வருகிறது.

 உருவாகும் சவால் என்ன?

உருவாகும் சவால் என்ன?

மேலும் பாஜக கட்சி சார்பில் தற்போதைய சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும்போதும் இமாச்சல பிரதேச மாநிலத்தை போன்று எதிர்ப்பலை உருவாகலாம். அதாவது சமீபத்தில் குஜராத்துடன் வெளியான இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் முடிவில் காங்கிரஸ் கட்சியிடம் பாஜக ஆட்சியை பறிகொடுத்தது. மிகச்சிறிய மாநிலமான இங்கு மொத்தம் 11 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் கொடுக்கவில்லை. இதுதவிர பிற கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவியவர்களுக்கு சீட் வழங்கப்பட்டது. இதன்மூலம் எதிர்ப்பு அலை உருவான நிலையில் சீட் கிடைக்காதவர்கள் சுயேச்சையாக களமிறங்கி ஓட்டுக்களை பிரித்ததால் 15 தொகுதிகள் வரை பாஜக வெற்றி வாய்ப்பை இழந்தது. இது தான் இமாச்சலில் பாஜக ஆட்சியை இழக்க முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனால் சீட் மறுக்கப்படும் எம்எல்ஏக்களை தேர்தலில் களமிறக்கப்படாமல் இருப்பதற்கான வியூகங்களும் சேர்ந்தே வகுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+