நாம் அனைவரும் சகோதர, சகோதரிகளே.. ஹிஜாப் விவகாரம் பற்றி மாணவி முஸ்கான் உருக்கம்
பெங்களூர்: ‛‛நாங்கள் அரசியலமைப்பை நம்புகிறோம். நாம் அனைவரும் சகோதர சகோதரிகளாக கல்லூரிக்கு செல்ல வேண்டும். ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்'' என ஹிஜாப் தொடர்பான தீர்ப்புக்கு முன்பு கல்லூரி மாணவி முஸ்கான் கூறினார்.
உடுப்பி மாவட்ட கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. ஹிஜாப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் வெடித்தன.
இது கர்நாடகத்தின் சில இடங்களில் வன்முறையானது. இதையடுத்து பள்ளி, கல்லூிகள் தற்காலிமாக மூடப்பட்டன. இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

மாணவிகள் வழக்கு
இதற்கிடையே ஹிஜாப் தடையை நீக்க கோரி உடுப்பி மாவட்ட கல்லூரி மாணவிகள் பெங்களூரில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி கிருஷ்ண தீக்சித் விசாரித்தார். இந்த வழக்கை அவர் மூவர் அமர்வுக்கு மாற்றினார். தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி அமர்வு விசாரித்தது.

இடைக்கால உத்தரவு
இந்த மூவர் அமர்வு மாணவர்கள் மத அடையாள ஆடைகள் அணிந்து வகுப்புக்கு செல்ல உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்றது. மொத்தம் 11 நாட்கள் விசாரணை நடைபெற்ற நிலையில் அரசு தரப்பு மற்றும் மனுதாரர்களின் தரப்பில் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன. மனுக்கள் மீதான விசாரணை பிப்ரவரி 25ல் முடிவடைந்தது.

உயர்நீதிமன்ற தீர்ப்பு
இதையடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை 10.30 மணிக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி தீர்ப்பு வழங்கினர். ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல எனக்கூறிய உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனக்கூறி கர்நாடக அரசின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.
Recommended Video

நாம் சகோதர சகோதரிகள்
தீர்ப்பு வருவதற்கு முன்பே போராட்டத்தில் பங்கேற்ற மாணவி முஸ்கான் என்ற கூறும்போது, ‛‛நாங்கள் அரசியலமைப்பு சட்டத்தை நம்புகிறோம். தீர்ப்புக்காக காத்து இருக்கிறோம். அனைவரும் அமைதி காக்க வேண்டும். நாம் அனைவரும் சகோதர சகோதரிகளாக கல்லூி செல்ல வேண்டும். பிரச்சனைக்கு முன்பு எப்படி இருந்தோமோ அதேபோல் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். நான் அவர்களை(ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்கள்) எனது சகோதர்களாக நினைக்கிறேன்'' என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications